தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி விலை உயர்வு..! 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கணிசமான உயர்வு மற்றும் சில சமயத்தில் விலை குறைவு என இருந்தது. இந்த நிலையில் நேற்றோடு ஒப்பிடும் போது இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.192 அதிகரித்துள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி  அடைந்து உள்ளனர்.

தங்கத்தின் நேற்றைய  விலை (22  கேரட் )

சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 408 -கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று  ஒரு கிராம் ரூ.3,075 ஆக உள்ளது. அதாவது,192 ரூபாய் அதிகரித்து சவரன் ரூபாய் 24 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் சுத்த தங்கம்
 
இதே போன்று சுத்த தங்கம் கிராம் ஒன்று ரூ.3,222 ஆகவும், சவரனுக்கு 200 உயர்ந்து 25,776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம் !

கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து, 42 ரூபாய் 80 காசுகளாகவும், கிலோ வெள்ளி 42 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.