Asianet News TamilAsianet News Tamil

இலங்கை தமிழர்கள் பணத்தை கையாடல் செய்து ஆட்டையை போட்ட நபர்கள்.. நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்த இருவரை உடனே கைது செய்ய சர்வதேச போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Gnanam foundation money fraud.. Colombo Court order
Author
Colombo, First Published Oct 21, 2021, 12:15 PM IST

பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவும் அறக்கட்டளை பணத்தை கையாடல் செய்த இருவரை உடனே கைது செய்ய சர்வதேச போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஞானம் அறக்கட்டளை என்பது இலங்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அறக்கட்டளை ஆகும். இந்த அறக்கட்டளை லைக்கா மோபைல் நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரனால் 2010ம் ஆண்டு தோற்றிவிக்கப்பட்டது. இந்நிலையில், லைக்கா மோபைல் மற்றும் அதன் தொண்டு நிறுவனமான ஞானம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த ராஜ் சங்கர் என்பவர் பல லட்சம் ரூபாயை  கையாடல் செய்ததாக லைக்கா நிறுவனம் கொழும்பில் உள்ள நீதிமனற்த்தில் வழக்கு தொடர்ந்தது. 

Gnanam foundation money fraud.. Colombo Court order

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜ்சங்கர் குற்றவாளி என உறுதியானதையடுத்து அவரை உடனே கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதுமே ராஜ் சங்கர் இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில், உடனே ராஜ் சங்கரை கைது செய்து இலங்கை கொண்டுவருமாறு இன்டர்போல் அமைப்புக்கு (சர்வதேச போலீஸ்) நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

Gnanam foundation money fraud.. Colombo Court order

மேலும், ஞானம் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் இருந்து பெரும் தொகை நிதியை அவர் கையாடல் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios