இந்த  உலகில்  அதிக வலிமை மிக்கவர்கள் பெண்கள் தான் என்றே கூறலாம்.  பெண் என்பவள் உண்மையில் அதிக வலிமை மிக்கவள். ஆண்கள் உடலளவில்  வலிமை மிக்கவர்களாக  இருக்கலாம். ஆனால் மனதளவிலும் சரி,  உடலளவிலும்  சரி அதிக வலிமை  மிக்கவர்கள்  பெண்கள் தான்

அதாவது ஒரு சின்ன டாஸ்க். ஒரே ஒரு நாள் மட்டும் ஆண்கள்  பெண்களை போல் நடந்துக்கொள்ள வேண்டும் என  வைத்துக்கொண்டால், அந்த ஒரு நாளில் பெண்களின் வலிகள் என்ன? எத்தகைய சவாலான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து  வருகிறார்கள் என அனைத்தும் உணர்த்த பெண்கள் ரெடியாக உள்ளனர்.

இது குறித்த  கருத்தை ,பல பெண்கள்  பேஸ்புக்கில்  பதிவிட்டு உள்ளனர். அப்படி என்னதான்  செய்ய    வேண்டும் என  நினைக்கிறார்கள் என பார்க்கலாம்.

பெண்களின் மார்பு மற்றும் பின்னழகை வர்ணித்து மகிழும் கீழ்த்தரமான  செயலை உணர்த்த வேண்டும்.

நிர்வாண  படங்களுடன் அவர்களது முகத்தை மார்பிங் செய்து அதை  சமூக  வலைதளங்களில் பகிர செய்வது. மாதவிடாய் நேரத்தில் பெண்கள் படும் பாடு என்ன என்பதை உணர்த்த வேண்டும்.

ஹார்மோன்கள்  பிரச்னை  தொடர்பாக,  பெண்களின்  மனநிலைமை எப்படி  மாறுகிறது  என்பதையும்,  அப்போது  பெண்களிடம் எப்படி  நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் புரிய  வைக்க  வேண்டும்.

யாரோ ஒரு  பெண்ணின்  புகைப்படத்தை  எடுத்து,  நான்  இப்படித்தான்  எனக்கு கால் பண்ணுங்க.. அது இது என  பல  வார்த்தைகளை கொட்டி ,  பெண்களை ஒரு போதை பொருளாக பார்ப்பதன் வலியை உணர்த்த  வேண்டும்.

விலைமாது என,  கிண்டலடிப்பது  எத்தகைய  வலியை கொடுக்கும். விலைமாதுவாக  அவர்கள்  மாற  வேண்டிய கட்டாயத்தில்  தள்ளியது  யார்? அவர்களின்  அடுத்த தலைமுறையாவது இந்த வலி மிக்க  வாழ்கையை வாழ கூடாது என அவர்கள் படும் பாடு என்ன? இந்த  சமுதாயம் அவர்களுக்கு  என்ன  செய்தது ? என  அனைத்தும்  உணர்த்த  வேண்டும்.

பேஸ்புக்கில்  தொடர்ந்து, மெசேஜ் செய்து  சாகடிப்பது.இதனால் சமூக வலைத்தளத்தில்  தைரியமாக  எந்த  பதிவையும் கூட போட முடியாததை உணர வைப்பது.

ஆசிட் வீச்சு, கற்பழிப்பு, தகாத வார்த்தைகளால் பேசி மனதை  புண்படுத்துவது. குடித்து விட்டு  வந்து  வீட்டில் வாந்தி  எடுப்பது, பிள்ளைகள் பற்றிய கவலை இல்லாமல்,  அவர்கள்  முன் தகாத வார்த்தைகளால்  பேசுவது.

மனைவியை அடிப்பது.

தோழியை  பார்க்க  வெளியில்  செல்ல  வேண்டும் என்றாலும், ஆண்களிடம்  அனுமதி  கேட்பது...

இன்னும் நீளும் பட்டியல்... பெண்கள்  படும் பாடு, இந்த சமூதாயத்தில்  அவர்கள்  அனுபவிக்கும்  இன்னல்கள்  என  அனைத்தும் ஆண்களுக்கு  புரிய  வைக்க  இது  போன்ற  ஒரு  டாஸ்கை   எதிர்கொள்ள  நிறைய  பெண்கள்  விருப்பப்படுகின்றனர்.