டேட்டிங்கும் செய்ய வேண்டும் செலவும் ஆகக் கூடாது என நினைப்பவர்களுக்கு சில யோசனைகள்

திரையரங்கு

அருகில் இருக்கும் தியேட்டருக்கு துணையுடன் ஒரு அழகான பயணம் மேற்கொள்ளலாம். இதுவும் அழகான தருணத்தை மனதில் தரும்.

பூங்கா

பிக்னிக் செல்வது சுவையான அனுபவம். பூங்கா போன்ற இயற்கை சூழல்கள் நிறைந்த இடத்திற்கு செல்வது மன அமைதியை கொடுக்கும். துணையும் இயற்கை அழகை ரசித்த படியே இரவு முழுவதும் நிலாவின் அழகில் பேசிக் கொண்டே இருக்கலாம்.

ஒயின் சுவை

இரவு உணவு சாப்பிடும்போது துணையுடன் ஒரு கிளாஸ் வொயின் டின்னர் தயார் படுத்தி உணவருந்தலாம். இதுவும் டேட்டிங் உணர்வை கொடுக்கும்.

அழகான கூரை உணவகம்

ஆடம்பர உணவகங்கள் இல்லாமல் ஊர் பாணியில் அழகான கூரை உணவகங்களில் உணவு உண்பதும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

திருவிழா

நகரத்திற்கு அருகில் நடைபெறும் திருவிழா கொண்டாட்டத்திற்கு ஒரு விசிட் அடிக்கலாம். அந்த ஊர் கலாச்சாரம், கொண்டாட்டம் போன்றவற்றை கண்டு மகிழலாம்.