காதலன் கழட்டி விட்டதால்....  கோபத்தில் ஆசிட் வீசிய தீவிர காதலி...! மருத்துவமனையில் தவிக்கும் காதலன்..! 

தன்னுடைய காதலை ஏற்று கொள்ளாததால் காதலன் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தின் அருகில் உள்ளது ஜகட்பூர். இந்த பகுதியில் வசித்து வருபவர் அலேக் பாரிக். இவர் நேற்று முன்தினம் இளம்பெண்ணுடன் தன் வீட்டின் அருகே பேசிக்கொண்டு இருந்துள்ளார். சில நிமிடத்தில் பயங்கரமாக அலறி துடித்து சப்தம் போட்டு உள்ளார். ஒரு ஓடி வந்து பார்த்த மக்களுக்கு காத்திருந்தது ஒரு பெரிய அதிர்ச்சி 

அப்போது கீழே விழுந்த பக்ரியை பார்த்த பொதுமக்கள் அவர் மீது ஆசிட் ஊற்றி இருப்பதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது அவர் அளித்த விளக்கத்தை கேட்ட போலீசாரே திகைத்து நிற்கின்றனர். அதாவது தன்னை ஒரு பெண் காதலித்ததாகவும், இவருக்கு அப்பெண் மீது காதல் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த அவர் மீது ஆசிட் வீசி விட்டார் என தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலர் இருவரும் காதலித்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்தப் பெண் இவ்வாறு ஆசிட் வீசி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவும் இவர் நன்கு பழகி விட்டு, பின்னர் இந்த பெண்ணை விட்டுவிட்டு விலகியதன் காரணமாகத்தான் அவர் கோபத்தில் இந்த வேலையை செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.