பாலில் சிறிதளவு நெய் சேர்த்து பருகுங்கள்! நினைத்து பார்க்க முடியாத பலன்கள் பெருங்கள்!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 13, Sep 2018, 2:14 PM IST
Ghee milk Mixing...Benefits
Highlights

பால் நாம் தினந்தோறும் அருந்தும் ஒரு உணவு. இதே போல் நெய்யும் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று. ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை நெய் இல்லாமல் எந்தவித உணவும் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம் நெய்யில் அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பால் நாம் தினந்தோறும் அருந்தும் ஒரு உணவு. இதே போல் நெய்யும் நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்று. ஆயுர்வேத மருத்துவத்தை பொறுத்தவரை நெய் இல்லாமல் எந்தவித உணவும் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம் நெய்யில் அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் நெய்யில் உள்ள ஆன்டி பயோடிக்ஸ் உள்ளிட்ட மருத்துவ குணம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

 

கடந்த காலங்களில் நெய் மருத்துவ பொருளாக மட்டும் அல்ல தினசரி உணவிலும் ஒரு அங்கமாக இருந்தது. இத்தகைய சிறப்பான நெய்யை சிறிதளவு பாலுடன் சேர்த்து பருகுவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். 

1) செரிமானம் சீராகும் பாலுடன் நெய் சேர்த்து பருகுவதால் கிடைக்கும் உடனடி பலன் செரிமானம் சீராவது தான். நீங்கள் என்ன வகையான உணவை சாப்பிட்டு இருந்தாலும் சிறிது நெய்யை பாலில் சேர்த்து பருகிவிட்டால் போதும் உங்கள் செரிமான உறுப்புகள் சிறப்பாக செயல்படும். வயிற்று சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பாலுடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்ல மருந்து.

2) மூட்டு வலிகளுக்கு எதிரிபாலுடன் நெய் சேர்ந்த உணவானது மூட்டு வலிகளுக்கு எதிரி என்றே கூறலாம். ஏனென்றால் மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையும் சரி மாலையும் சரி சிறிதளவு நெய்யை பாலில் கலந்து பருகி வாருங்கள். சிறிது நாட்களிலேயே மூட்டு வலியில் இருந்து உங்களுக்கு முற்றிலுமாக விடுதலை கிடைத்துவிடும்.

3) செக்ஸ் வாழ்க்கை மேம்படும்  ஆணும் சரி பெண்ணும் சரி தினமும் பாலுடன் நெய்யை சேர்த்துக் கொண்டால் போது இருவரும் கட்டிலில் சிறப்பாக செயல்படலாம். அதிலும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக பாலுடன் நெய்யை சேர்த்து பருகினால் அந்த இரவு உங்களது செக்ஸ் நீங்களே எதிர்பார்க்காத வகையில் சிறப்பானதாக இருக்கும். இதே போல் செக்ஸ் நீண்ட நேரம் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் நிச்சயமாக இந்த உணவை முயற்சி செய்யலாம். இதே போல் நீண்ட நேரம் முன்விளையாட்டுகளை எதிர்பார்க்கும் பெண்களும் பாலுடன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

4) தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வு கடுமையான மன உலைச்சல், வேலைப் பளு, குடும்ப பிரச்சனைகளால் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் இரவு பாலுடன் சிறிதளவு நெய் சேர்த்து பருகுங்கள். உடனடியாக உங்களுக்கு வித்தியாசம் தெரியும். நன்றாக  உறக்கம் வரும். மறு நாள் காலையும் உங்களுக்கு அழகானதாக இருக்கும்.

5) உடல் பளபளப்பாகும் பால் மற்றும் நெய் என இரண்டுமே உடல் உள்ளுறுப்புகளுக்கு மட்டும் உடல் தோற்றத்தையும் மேம்படுத்தக்கூடியதாகும். பொதுவாகவே நெய்யில் உடலின் தோல் பகுதி டிரைனஸ்சை சரி செய்யக்கூடியது. இதனுடன் பாலையும் சேர்க்கும் பட்சத்தில் உங்கள் உடலின் சருமம் பளபளப்பாகும். உங்கள் தோற்றமும் புதிய பொலிவு பெறும். குறிப்பு: சுத்தமான பசும் பால் மற்றும் சுத்தமான நெய் ஆகியவற்றை பயன்படுத்தினால் மட்டுமே இந்த பலன்களை பெற முடியும். (ஒரு சிலருக்கு பால் மற்றும் நெய் அலர்ஜியாக இருக்கலாம். எனவே அவர்கள் இதனை தவிர்க்கலாம்)

loader