"பிகினி" உடையில் ஆண்கள்...! பெட்ரோல் நிலையத்தில் பரபரப்பு..! 

பெட்ரோல் நிலைய விளம்பரத்திற்காக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து ஆண்களும் பெண்களுக்கு இணையாக பிகினி உடை அணிந்து வந்துள்ளனர்.

அதாவது பிகினி உடை அணிந்து வருபவர்கள் தங்களின் வாகனங்களுக்கு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என புதிதாக தொடங்கப்பட்ட பெட்ரோல் நிலையம் விளம்பரத்திற்காக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெண்கள் மட்டும் தான் வர வேண்டும் என தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆண்கள் சிலர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தங்களுடைய கார்களில் இலவசமாக பெட்ரோல் நிரப்ப பிகினி உடையில் வந்து சென்றனர்.

இதில் எந்த விஷயத்தை உற்று கவனிக்க வேண்டும் என்றால் பெட்ரோல் நிலையத்திற்கு தேவையானது விளம்பரம் மட்டுமே... அதை பெண்கள் செய்தால் என்ன? ஆண்கள் செய்தால் என்ன? என்ற கோணத்தில் பார்க்க வேண்டி உள்ளது. ஒரு வேளை பெண்கள் அதிகமாக வந்திருந்தாலும் கூட இந்த அளவிற்கு விளம்பரம் கிடைத்து இருக்குமா என்பது கேள்விக்குறியே... ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆண்கள் பிகினி உடையில் வந்திருந்ததால் சமூக வலைத்தளம் சும்மா இருக்குமா? போட்டோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட இந்த ஒரு புகைப்படம் உலகம் முழுக்கவே பரவி விட்டதால் பெட்ரோல் நிலையத்திற்கு இதைவிட வேறு எந்த ஒரு வடிவிலும் விளம்பரம் தேவைப்படாது என்றே பலரும் கருதுகின்றனர். அதுதான் ஆணித்தரமான உண்மை என்பதும் யாராலும் மறுக்க முடியாது.