ஆண்கள் ஷேவிங் செய்யும் போது ஒரு சில முக்கிய விஷயங்களை கடைபிடித்தால் மிகவும் நல்லது. 

அதன்படி ஷேவிங் செய்வதற்கு முன்பாக சுடு தண்ணீரில் முகத்தை நன்கு கழுவிவிட்டு துணி கொண்டு துடைக்காமல் அப்படியே கொஞ்சம் நேரம் இருக்க வேண்டும்.இதனால் அந்த மயிர்கால்கள் தளர்வடைந்து மிகவும் எளிதாக முடி வெளிவந்துவிடும்.

அதேபோன்று ஷேவிங் ஜெல்லை பயன்படுத்தும் போது குறைந்தது மூன்று நிமிடமாவது முகத்தில் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஷேவிங் செய்யும் போது முடி எளிதாக வெளிவரும்.  

ஒருவேளை அதிக தாடி இருந்தாலும் ஷேவிங் கிரீமை சற்று அதிகமாக பயன்படுத்தி சில நிமிடம் காத்திருந்து பின்னர் ஷேவிங் செய்வது மிகவும் நல்லது. ஷேவிங் செய்து முடித்த பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவுவது மிகவும் முக்கியம். இதனால் சருமத்துளைகள் திறக்கப்படும் 

ஷேவிங் செய்த பிறகு தடவ வேண்டிய ஜெல் மற்றும் ஈரப்பசை ஏற்படுத்தும் க்ரீம் தடவினால்  சருமம் மென்மையாக காணப்படும். அதன் பின்னரும் வீட்டில் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பாருங்கள். இதன் மூலம் சருமத்தில் வறட்சி இல்லாமல் மென்மையாக இருக்கும்.