அந்த நேரத்தில் ஆண்கள் தெரிஞ்சிக்க வேண்டியது இதுதானாம்...! பெண்கள் சொல்ல மாட்டார்கள்....

காதல் செய்து கல்யாணம் முடிந்து குடும்ப வாழ்க்கை சுமூகமாக நகர்ந்தாலும்,பெண்களுக்கு ஒரு தேடுதல் இருக்கும் அல்லவா ..?

அதனால் தான் பலரும் சொல்வார்கள்....பொண்ணுங்க புரிஞ்சிக்கவே  முடியாது என்று....

ஆம் இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும்,சில முக்கிய  காரணங்களை இப்போது பார்க்கலாம்

குறிப்பாக மாதவிடாய் காலங்களில்....

மூட் ஸ்விங்

மாத விடாய் காலங்களில் பெண்கள் அவர்களுக்கே தெரியாமல் ஒரு விதமான அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்....எத்தனை கண்டாலும் ஒரு வெறுப்பு இருக்கும்.திடீரென அழ கூட செய்வார்கள்....இந்த தருணத்தில் அவர்கள் மன நிலைமைக்கு ஏற்றவாறு  நடந்துக் கொள்ள வேண்டும்.

அலுவலக வேலை

அலுவலக நேரங்களில்,ஏதேனும் வேலை அழுத்தம் காரணமாக  மனதளவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு ஒருவிதமான அப்செட் தெரிந்தால், அதனை ஆண்கள் பக்குவமாக புரிந்துக் கொண்டு அவர்களிடம் அன்பாக பேசி என்ன நடந்து..? எதாவது பிரச்சனையா..? என ஆண்களே கேட்க வேண்டும் என தான் பெண்கள் அந்த நேரத்தில் எதிர்பார்பார்கலாம். அதாவது அவர்களாகவே முன்வந்து தனக்கு இந்த பிரச்சனை உள்ளது  என தெரியப்படுத்த மாட்டார்கள்

சர்ப்ரைஸ்

இது போன்று கணவர் தனக்கு எதாவது அன்பாக வாங்கி தர மாட்டாரா ..? அதாவது சர்ப்ரைஸ் கொடுக்க மாட்டாரா என என பெண்கள்  எதிர்பார்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளாடைகள்                                     

உள்ளாடை வாங்கும் போது மனைவியிடம் கேட்டு எது வேண்டும் என  தேர்வு செய்வதை விட, மனைவிக்கு பிடித்த கலரில் சரியான அளவில்   உள்ளாடைகளை தேர்வு செய்து வாங்கி தந்தால் மிகவும் விருப்பம் தெரிவிப்பார்கள் பெண்கள்

விசேஷம்

வீட்டில் எதாவது விசேஷம் என்றால்,அப்போது பொதுவாகவே பெண்களுக்கு அதிக வேலை பளு இருக்கும் அல்லவா..? அதனை  புரிந்துக்கொண்டு உதவி செய்ய வரவா... என  கணவர் கேட்டாலே போதும் என எதிர்பார்பார்கள் மனைவி

முக்கிய முடிவு

ஏதாவது முக்கிய  பொருளை வாங்கும் போது மனைவியின் விருப்பதை கேட்டறிந்து முடிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்