கோயம்பேடு பேருந்து நிலையத்தில் "கட்டணமில்லா பயண அட்டை"..!  வாழ்த்தி சென்ற மக்கள்..! 

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழங்கப்பட்டது

இதற்கு முன்னதாக மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்குவதிலும் சரி அதனை பெறுவதிலும் சரி சில மாற்றங்கள் இருந்து வந்தது. சில சமயத்தில் அதிக கூட்ட நெரிசல் காரணமாக பயண அட்டை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் இலவச பயண அட்டை பெறுவது எப்படி என்ற விழிப்புணர்வே இல்லாமலும் இருந்தது.

இந்நிலையில் ஒரு மாறுதலாக சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயண  அட்டையை இன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழங்கப்பட்டபோது, மூத்த குடிமக்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் அவர்களை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக உள்ள இருக்கைகளில் அமர வைத்துவிட்டு ஒவ்வொருவரையும் ஒன்றன்பின் ஒன்றாக அழைத்து பயண அட்டை வழங்கப்பட்டது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் கால தாமதத்தை தவிர்க்கும் பொருட்டும் இவ்வாறு அரசு ஊழியர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு மூத்த குடிமக்கள் மத்தியில் மட்டுமின்றி அங்கு இருந்த பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

இதேபோன்று எப்பொழுது பயண அட்டை வழங்கினாலும் இதனை கடைபிடித்தால் மிகவும் சௌகரியமாக இருக்கும் என பயண அட்டை பெற வந்த மூத்த குடிமக்கள் தெரிவித்தனர். 

மாற்றம் ஒன்றே மாறாதது..!