Heart attack: ஹார்ட் அட்டாக் வரமா தடுக்க, நீங்கள் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம். அவை என்னென்ன உணவுகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும், பல லட்சக்கணக்கான மக்களை இதய நோய் என்பது தாக்குகிறது.சமீபத்திய ஆய்வின் படி, அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கு சுமார் 6 லட்சத்திற்கும் அதிமான இறப்புகள் இதய நோய் காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதயநோய் ஒவ்வொரு 36 வினாடிக்கும் ஒரு உயிரைக் கொல்கிறது. சமீபத்திய ஆய்வுகளின் படி, அமெரிக்காவில் மட்டுமின்றி இந்தியாலும் இதய நோய்க்கு பெரும்பாலான வாலிபர்கள் உயிர் விட்டுள்ளனர்.கேட்கும் போதே அதிர்ச்சியாக உள்ளதா? எனவே, ஹார்ட் அட்டாக், உங்களுக்கும் வராமல் இருக்க, உங்கள் வாழ்கை முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்.

முறையான உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வது போன்றவை அவசியம். இவற்றை தவிர்த்து, உணவு முறை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆம் நாம் உண்ணும் உணவில் கவனம் தேவை .நீங்கள் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்ப்பது அவசியம். அவை என்னென்ன உணவுகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியமான இதயத்திற்கு குறைந்த சோடியம் உணவு அவசியம்.ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம்களுக்கு மேல் உப்பை உண்பது உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கும்.

முதலில் உருளைக்கிழங்கில் பொரித்த சிப்ஸ் :

பெரும்பாலும், பொரித்த உணவுகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது அல்ல என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.அதிலும் குறிப்பாக, உருளைக்கிழங்கு சிப்ஸில் கொழுப்பு மற்றும் சோடியம் போன்றவை அதிக அளவில் உள்ளது. மேலும், அதிகளவில் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சு விடுவது மிகவும் கடினமாக தோன்றும். இவை உங்கள் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

சோடா:

பல இருதய நோய் நிபுணர்கள் கூற்றுப்படி, அதிக சோடா குடிப்பது உங்கள் இதயத்தை சரியாக பம்ப் செய்வதைத் தடுக்கும். சோடா குடிப்பதால் கடுமையான விளைவுகள் ஏற்படுத்தும். வழக்கமான சோடா இன்சுலின் ஸ்பைக்கை ஊக்குவிப்பது மட்டுமின்றி இது உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். சர்க்கரைகளுக்கு அப்பால், சோடாவில் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸை ஊக்குவிக்கும் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் மூலமாக மாறும். மேலும், சர்க்கரை உடல் வீக்கத்திற்கு வழிவகுக்கும். இது இருதய நோயை ஏற்படுத்துகிறது.

கெட்ச்அப்:

அதிக சோடியம் உட்கொள்வது இதயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். அப்படியாக, நீங்கள் அடிக்கடி விரும்பி சாப்பிடும் கெட்ச் அப்பில் 4 கிராம் சர்க்கரை மற்றும் 160 மில்லி கிராம் சோடியம் ஆகியவை அடங்கியுள்ளது. எனவே, இவற்றை தவிர்ப்பது அவசியம்.

பீட்ஸா மற்றும் பர்கர்:

அதிக நார்ச்சத்து உணவுகள் உட்கொள்வது, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து உங்கள் இதயத்தை சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவும் ஒரு மேக்ரோ உணவு பொருள் ஆகும். கொழுப்பின் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக பீட்ஸா உள்ளது. அதில்போடப்படும் சீஸ்ஸில் அதிக அளவு கொழுப்பு நிறைந்துள்ளது. எனவே, இவற்றை தவிர்ப்பது அவசியம்.

மேலும் படிக்க...Kadalai maavu cutlet: எண்ணெய் குறைவுதான்...ஆனால், சுவை அதிகம்...ஆரோக்கியம் தரும் கடலைமாவு கட்லெட் ரெசிபி..!