வர்தா புயல் எதிரொலியால் ...... மல்லிகை பூ விலை கடும் உயர்வு .....!!!
வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் சற்று வட்டார பகுதிகளில் விளைந்த பூச்செடிகள் , அடியோடு சாய்ந்ததால் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக , தற்போது கிறிஸ்துமஸ், நியூ இயர், சபரி மலை விஷேசம் என பல விழாக்கால நேரம் என்பதால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது.
இந்நிலையில் தேவையான அளவுக்கு பூக்கள் கிடைக்கப்பெறாததால், மதுரை திருச்சி, நிலக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்களை சென்னைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதன் காரணமாக , பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. அதன்படி,
மல்லி பூ ஒரு கிலோ – 1500 ரூபாய்
ஜாதி மல்லி ஒரு கிலோ - 600 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.
அதே சமயத்தில் சாமந்தி பூ ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுவதால், தற்போது சாமந்தி பூ அதிக அளவில் விற்பனையாகிவருகிறது
