மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி ஜூலை மாதத்தில் ஒரு முறையும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும் நிரந்தர வைப்புத்தொகை மீதான வட்டி விகிதத்தை குறைத்து உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

சென்ற மாதம் ஜூலை 29ஆம் தேதி பிப்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது ஸ்டேட் வங்கி. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அந்த சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் மீண்டும் வட்டி விகிதத்தை குறைப்பதாக தற்போது தெரிவித்து இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த, முன்பு ஒருமுறை அறிவிக்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்பு மற்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதக் குறைப்பு என ஒரே மாதத்தில் இரண்டு முறை வட்டி விகித குறைப்பு அறிவித்து உள்ளது ஸ்டேட் வங்கி

அதன் படி,

ஒரு கோடிக்கு குறைவாக  நிரந்தர வைப்புத்தொகை என்றால், 

7- 45 நாட்கள் வரை - 4.50% 

46 - 179 நாட்கள் வரை - 5.50% 

180 - 210 நாட்கள் வரை - 6.00% 

211 - 1 ஆண்டுக்குள் - 6.00% 

1 - 2 ஆண்டுகளுக்குள் - 6.70% 

2 - 3 ஆண்டுகளுக்குள் - 6.50% 

3 -5 ஆண்டுகளுக்குள் - 6.25% 

5 - 10 ஆண்டுகள் வரை - 6.25% 

ஒரே மாதத்தில் இரண்டு முறை வட்டி விகிதத்தை 2 முறை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு  உள்ளதால் ஸ்டேட்  வங்கியில் நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.