வீட்டு பொருள்களை வைத்து பல் வலி வைத்தியம் செய்ய தெரிந்து கொள்ளுங்கள்.
பல் வலியை மட்டும் யாராலும் தாங்கமுடியாது. இந்த வலி வந்தால் எந்த வேலையையும் கவனமாக செய்ய முடியாது. ஆனால் உடனே மருத்துவரை அணுக முடியாத சூழல் இருக்கலாம். அப்படியான சூழலில் 5 எளிய வழிகளில் நிவாரணம் பெற வீட்டு வைத்திய முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
கிராம்பு எண்ணெயில் கொஞ்சமாக மயக்க மருந்து, கிருமி நாசினி உள்ளது. இதை பல் வலிக்கு பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும். பஞ்சில் சில துளி கிராம்பு எண்ணெயை நனைத்து, 20 முதல் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட பல்லின் மீது வைத்து கொள்ளுங்கள். தேவைக்கேற்ப பல முறை கூட செய்யலாம்.
வெதுவெதுப்பான உப்புநீரில் வாயை கொப்பளிக்கலாம். இதனால் வீக்கம் குறைந்து வலி மட்டுப்படும். ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் கொஞ்சம் உப்பு போட்டு அடிக்கடி வாய் கொப்பளிக்கலாம்.
நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. ஒரு பல் பூண்டை நசுக்கி, அதனுடன் உப்பு கலந்து, வலியால் பாதிக்கப்பட்ட பல்லில் நேரடியாக வைத்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சமைக்கும்போது எதையும் வேஸ்ட் ஆகாம முழுசா பயன்படுத்த, இல்லத்தரசிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ்
ஹைட்ரஜன் பெராக்சைடில் உள்ள கிருமி நாசினிகள் பாக்டீரியாவை கொல்லக் கூடியது. ஹைட்ரஜன் பெராக்சைடுடன் தண்ணீரின் சம பங்கு கலந்து வாயில் 30 விநாடிகளுக்கு வைத்துவிட்டு கொப்பளிக்கவும். நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய தேவைக்கு ஏற்ப பல முறை கூட இதை செய்யலாம்.
புதினா பல் கூச்சம், வலியை குறைக்கும். இந்த புதினா டீ பையை (mint tea bag) 15 முதல் 20 நிமிடங்கள் வலியுள்ள பல்லில் வைக்கலாம். வலியை குறைக்கும். தீவிர பல் வலிக்கு தற்காலிக நிவாரணமாக மட்டுமே இந்த குறிப்புகள் இருக்கும். இதை செய்த பிறகும் பற்களில் வேறு பிரச்சனை தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகவும்.
இதையும் படிங்க: மறக்காமல் தினமும் 2 வெற்றிலை மட்டும் சாப்பிட்டு பாருங்க, உடல் நச்சுக்களை வெளியேற்றி பல நன்மை செய்யும்..
