பல மாதங்களாக ஊரடங்கிற்கு பின்னர் பொங்கல் கொண்டாட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக கொண்டாடப்படும் அறுவடை விழாவாகும். தொடர்ந்து 4 நாட்களாக அழகான வான வேடிக்கை, பலவகையான உணவு பொருட்கள், மகிழ்ச்சி பொங்க நீடிக்கும். எல்லோரும் திருவிழாவைக் கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கும்போது கொசுக்களால் பல பிரச்சனைகள் விளைவிக்கும் அதனால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கொசுக்களினால் நோய்கள் மழைக்காலத்திற்கு மட்டுமே வரும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இது ஒரு கட்டுக்கதையாகும்.

பண்டிகை காலங்களில் நீங்கள் கொசுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க ஐந்து வழிகள் இதோ:

கொசு வலைகளை பயன்படுத்தவும்: உங்கள் ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க கொசுக்கள் காரணமாக இருக்கக்கூடாது.காற்று சுழற்சியை ஆரோக்கியமாகவும்,அறையை காற்றோட்டத்துடனும் வைத்திருக்க,கம்பி வலை  உடைய ஜன்னல்களைப் பயன்படுத்துங்கள்.

வீட்டினுள் சுகாதாரத்தை பராமரிக்கவும்: குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுதல் மற்றும் தேங்கி நிற்கும் நீர்,கழிவு நீர் ஆகியவை கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணம் ஆகும். நீங்கள் தினமும் குப்பைகளை வெளியே எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் தேங்கி நிற்கும் மற்றும் சேமிக்கப்பட்ட நீர் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

எப்போதும் விழிப்புடன் இருங்கள்:

கொசுக்களைப் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன, அவை மழைக்காலங்களில் கொசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன, அவை இரவில் மட்டுமே கடிக்கின்றன போன்றவை. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ஏனெனில் உங்கள் வீடு எப்போதும் பகல் மற்றும் இரவு முழுவதும் கொசுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் ஆல் அவுட் லிக்விட் போன்ற கொசுகொல்லிகளை தவறாமல் பயன்படுத்துவது நல்லது.
வீட்டில் மறைக்கப்பட்ட இடங்களை சோதனை செய்யுங்கள்:

உங்கள் வீட்டிலும் அதைச் சுற்றியுள்ள மறைக்கப்பட்ட இடங்களிலும் சோதனை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவை கொசுக்களின் இனப்பெருக்க இடங்களாக மாறும். இந்தியாவில் யாரும் கவனிக்காத பல திறந்தவெளிகள் உள்ளன, இவை உள்ளூர் நகராட்சி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

கொசுவை ஒழிக்கும் வழக்கமான பயன்பாடு: ஆல் அவுட் லிக்விட் எலக்ட்ரிக் போன்ற கொசு கொல்லிகளை பயன்படுத்துவது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும். இந்த தயாரிப்பு கொசுக்களை உங்கள் வீட்டை விட்டு வெளியே வைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு கொசுக்கள் காரணமாகின்றன. இந்த நோய்கள் ஆபத்தானவை மட்டுமல்ல, அவற்றிலிருந்து மீள நீண்ட காலமாகும். மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை மனதில் வைத்து நீங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கொசுக்களிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்..!