21 ரூபாயில் மீன் குழம்பு  சாப்பாடு :  அரசின்  அட்டகாசமான  திட்டம்

ஏழை  எளியோர்  வயிறார   சாப்பிட  குறைந்த  விலையில்  உணவு வழங்குவதோடு, மீன் குழம்பு  சாப்பாடு   அறிமுகம்  செய்துள்ளது மேற்கு வங்காள  அரசு

தமிழகத்தில்  அம்மா உணவகம்  இருப்பதாய் போல்,  தற்போது  மேற்கு வங்காள  மாநிலத்திலும்   குறைந்த  விலையில் . அனைவரும்  வயிறார  உணவருந்த  வேண்டும் என்பதற்காகவும்,  அதே சமயத்தில்  அசைவ  பிரியர்கள் கூட  குறைந்த  விலையில்  விரும்பி சாப்பிட  , வெறும் 21  ரூபாய்க்கு  மீன்  குழம்பை  அறிமுகம் செய்துள்ளது  மேற்கு வங்காள அரசு

21 ரூபாயில் மீன் குழம்பு சாப்பாடு :

50 கிராம் எடையுள்ள மீன் துண்டு,

100 கி எடையுள்ள சாதம்,

75 கி பருப்பு குழம்பு,

50 கி காய்கறி ஆகியவை சேர்ந்த  சாப்பாடு 21 ரூபாய்க்கு  வழங்கப்படுகிறது  என்பது  குறிபிடத்தக்கது.

விலை குறைவாக இருந்தாலும்,  உணவு  சுவையாக  இருப்பதாக   மக்கள்  தெரிவிக்கின்றனர் .

மேற்கு வங்க மக்கள்  மீன் பிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.