fish attack disease be careful

தமிழகத்தில், பரவலாக அசை உணவை விரும்பி உண்பவர்கள் அதிகம். அதிலும் மீன் வகைகள் என்றால் சொல்ல வேண்டுமா என்ன அசைவப் பிரியர்களுக்கு? வீட்டுல சும்மா அம்மா மீன் வறுத்து வைக்க வைக்க சூடா சாப்பிடும் மீன் பிரியர்கள் பலர் உள்ளனர். அதே போல மாங்காய் போட்டு கொஞ்சம் மீன் குழம்பு வேண்டும் என அடம் பிடிக்கும் அசைவ பிரியர்களும் பலர் உள்ளனர்.

இநிலையில் தற்போது மீன்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால், மிகவும் நியாயமான விலைகளில் அனைத்து அசைவக் கடைகளிலும் எல்லா நாட்களிலும் கிடைக்கக் கூடிய மீன் வகையான சூட, மத்தி, சாலை மீன்கள், glugea என்கிற ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாம்.

இந்த வகை மீன்களின் குடல் பகுதியில் வெள்ளை நிறத்தில் முட்டைகள் போல் சிறு சிறு உருண்டைகள் காணப்படுகிறது. அப்படி இருப்பவை மீன் முட்டைகள் போல் உள்ளதால், அதனை சாப்பிடுபவர்களும் உண்டு. அவர்களுக்கான எச்சரிக்கை தான் இது!

இப்படி மீன்களில் தென்பட்டால் அந்த மீன் Glugea ஒட்டுண்ணி நோயால் பதிக்கப்பட்ட மீன் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இப்படி ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்ட மீன்கள் ஓமன் நாட்டில் பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வைரலாகப் பரவி வருகின்றன.