முதல் "தனியார் ரயில் சேவை" இன்று முதல்...! இந்தியாவில்....!

லக்னோ- புதுடில்லி இடையே முதல் தனியார் ரயில் சேவை இன்று இயக்கப்பட்டது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கிவைத்தார். முதல் நாளான இன்று  389 பயணிகள் பயணம் செய்தனர். அக்டோபர் 4ம் தேதியான இன்று காலை சரியாக 6.10மணிக்கு கிளம்பி 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது. பின்னர் மீண்டும் டெல்லியில் இருந்து மாலை 3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடையும்

இந்த ரயில் லக்னோவில் இருந்து நாளை மறுதினம் முதல் ரெகுலராக இயக்கப்படும். ஆனால் வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இந்த ரயில் சேவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கான்பூர் மற்றும் காசியாபாத் இந்த இரண்டு நகரங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும் என்பது கூடுதல் தகவல்.

லக்னோவில் இருந்து டெல்லிக்கு 6 மணிநேரம் 15 நிமிடங்களில் சென்றடைய முடிகிறது. இதனால் பொது மக்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தனியார் ரயில் சேவை என்பதால் அனைவர் மத்தியிலும் ஒரு விதமான எதிர்பார்ப்பும் கிளம்பி இருக்கிறது.