Asianet News TamilAsianet News Tamil

 முதலுதவி  செய்ய  “ முதலுதவி ஆப்ஸ் “.......!!! அறிமுகமானது உயிர்காக்க உதவும்  ஆப்ஸ்....!!!

first aid-app-introduced
Author
First Published Dec 30, 2016, 5:58 PM IST


 முதலுதவி  செய்ய  “ முதலுதவி ஆப்ஸ் “ அறிமுகமானது உயிர்காக்க உதவும்  ஆப்ஸ்....!!!

முதலுதவி என்ற வார்த்தை நமக்கு  தெரியும் .ஆனால் முதலுதவி செய்வது எப்படி என்று நம்மில் பலருக்கும் தெரியாது.

ஆனால் , முதலுதவி செய்வது எப்படி என்பதை  தெரிந்து வைத்து கொண்டால்,  யாருக்காவது  அவசரகாலத்தில் தேவைப்படும்.

இதெல்லாம்  ஓகே .....இப்ப  என்ன  சொல்ல  வரீங்கன்னு நினைக்க   தோணும்.....

அதாவது,   மோடியின்  கனவான  “  டிஜிட்டல் இந்தியாவை  நோக்கி  செல்கிறோம்.....அதன்படி,  தற்போது    ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கப்படுகிறது. அதற்கான  செயலியை  கூட தற்போது “ பீம் “ என்ற  பெயரில்  பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது முதலுதவி  செய்வது எப்படி   என  தெரிந்துகொள்ளவும்,  அவசர  காலத்தில், அந்த  செயலியில்  உள்ள முதலுதவி  செய்வது குறித்த  வழிமுறைகளை  பின்பற்ற  ஏற்ற  வகையில் , தற்போது முதலுதவி ஆப்ஸ்  அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதலுதவி சிகிச்சைகள் குறித்த மொபைல் ஆப் ஒன்றை,  ரெட் கிராஸ் அமைப்புடன் இணைந்து பிட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

7 வாரங்கள் நடந்த இந்த வகுப்பில்,  முதலுதவி  குறித்து பல  விவரங்களை  தெரிந்துகொண்ட  இந்த  மாணவர்கள் தற்போது  இந்த  ஆப்ஸ்  உருவாக்கியுள்ளனர்.

மாரடைப்பு,  பாம்பு கடி,   ரத்த காயங்கள்,  சாலையில்  விபத்து  உள்ளிட்ட  பல்வேறு  சமயங்களில் , எவ்வாறு முதலுதவி செய்ய  வேண்டும் என   மிக எளிதாக  புரியும் வகையில்  விளக்கப்பட்டுள்ளது.

இனி  இந்த  ஆப்ஸ்  மூலம் , நீங்களும்  முதலுதவி செய்யலாம் .......

 


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios