Fingerprint scan on the smartphone - Samsung company
கைரேகை முறையில் பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
புதிய முயற்சிகளை மேற்கொண்டு பயனாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சித்து வருகிறது சாம்சங் நிறுவனம். அந்த வகையில், 12 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் பேட்டரிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் முயற்சித்து வருகிறது. இந்த புதுமையான பேட்டரிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் பட்சத்தில், இதனை வாங்க பலர் ஆதுர்வம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக புதிய முறையில் செக்யூரிட்டி வசதிகளை வழங்கவும் சாம்சங் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. தற்போது பேசியல் ஸ்கேன், பிங்கர் பிரிண்ட் ஸ்கேன், ஐரிஸ் ஸ்கேன், பேட்டன் மற்றும் பாஸ்வேர்ட் என பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
அதனுடன் பயனாளர்களின் உள்ளங்கையில் உள்ள கைரேகையின் பின்புற கேமரா மூலம் ஸ்கேன் செய்து அதனையும் பாஸ்வேர்டாக பயன்படுத்த அந்நிறுவனம் முயற்சித்து வருகிறது. இந்த வசதியானது மற்ற பாதுகாப்பு சிறப்பம்சங்களைப்போல் அன்லாக் செய்ய உதவுவதல்ல.
இந்த வசதியைப் பயன்படுத்தி கைரேகையை ஸ்கேன் செய்தால் பயனாளர்களுக்கு பாஸ்வேர்ட் ஹின்ட் வழங்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது பயனாளர்கள், தங்களின் பாஸ்வேட்டுகளை மறந்த பின்னர், அதனைக் கண்டறிய ஹிண்ட் என்ற வசதியைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதனை வெளிப்படையாக காண்பிக்காமல் இந்த வசதியின் மூலம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பயனாளர்களின் கைரேகை ஸ்கேன் செய்த பிறகே இந்த ஹிண்ட் வெளிப்படையாகத் தெரியவரும் என்றும், இந்த வசதி சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக உள்ள ப்ரீமியம் மாடல்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
