ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்து சமோசா கேட்டு கிண்டல்! கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வைத்த போலீசார்!

உலகம் முழுவதும் 190  நாடுகளுக்கும் மேலாக கொரோனா தோற்று ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இத்தாலி,ஸ்பெயின்,பெல்ஜியம் என அனைத்து நாடுகளிலும் கொரோனா  தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியது. தமிழகத்தில் மட்டும் 411 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில் தற்போது வரை 2 ஆம் கட்டத்தில் தான் உள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

 

வரும் 14 ஆம் தேதி வரை ஓராண்டுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அவரவர்  வீட்டில் உள்ளனர். சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற மத கூட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள்  பெரும்பாலோனோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  

இந்த ஒரு நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும், கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே உதவிக்கு அழைக்க ஹெல்ப்லைன் எண்ணை மத்திய அரசும், அந்தந்த மாநில அரசும் தெரிவித்து உள்ளது.

இத்தனையும் கிண்டல் செய்யும் விதமாக, ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் கொரோனா உதவி எண்ணுக்கு அழைத்து சமோசா, பீட்சா என உணவு ஆர்டர் செய்தல் என பலர் உதவி எண்ணை தவறாக பயன்படுத்தி உள்ளனர். 

உத்திரபிரதேசத்தில் இவ்வாறு செய்த பலருக்கும் அம்மாநில போலீசார் வித்தியாசமான தண்டனை வழங்கி வருகின்றனர். அந்த வகையில்,ஹெல்ப் லைன் நம்பருக்கு போன் செய்து சமோசா பீட்சா ஆர்டர் கொடுத்தவர்களை அடையாளம் கண்டு சாலைகளைத் தூய்மை செய்தல், கழிவுநீர் வாய்க்கால்களை தூய்மை செய்தல் மற்றும் மற்ற தூய்மை பணிகளை செய்ய ஆர்டர் செய்து உள்ளனர்.