பாபாவை வணங்கும் போது மறக்காமல் இதை செய்ய வேண்டுமாம்..! 

அனைவரிடத்திலும் அன்பு காட்டுபவராக இருந்த சாய்பாபாவின் பக்தர்கள் இன்று எங்கு சென்றாலும் நம் கண் முன்னே பார்க்கமுடியும். வியாழக்கிழமை சாய்பாபாவை வணங்கினால் வாழ்வில் அற்புதங்கள் நடக்கும் என்பது ஐதீகம். எனவே தான் பாபாவின் பக்தர்கள் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மறக்காமல் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.

வியாழக்கிழமை அன்று சாய்பாபா கோவிலுக்கு சென்று எந்தெந்த பொருளை வைத்து வணங்கினால் நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

வியாழக்கிழமையன்று பசலைக்கீரை நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். அதேபோன்று அவருக்கு பிடித்த ரவையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமான வாழ்க்கையும் அமையும் என்பது ஐதீகம்.

அவருக்கு எப்போதும் பிடித்த கஞ்சி கூழ் இவற்றை வைத்து நெய்வேத்தியம் செய்து வணங்கி பக்தர்களுக்கு தானம் செய்தால் வாழ்வில் கஷ்டங்கள், வறுமை நிலை மாறி செல்வந்தர்களாக மாறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

தேங்காய் பொதுவாக பயன்படுத்தக் கூடிய பொருள். சாய்பாபாவிற்கு தேங்காயை உடைத்து வழிபட்டால் நம் வாழ்வில் ஏற்படுகின்ற பல தடைகள் உடனடியாக நீங்கும். அதேபோன்று சாய்பாபாவிற்கு பிடித்து ஆரஞ்சு பழத்தை வைத்து வணங்கினால் தோஷங்கள் நீங்கிவிடும்.. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதே போன்று சாய்பாபாவிற்கு பிடித்த சாமந்தி மலர்களை வணங்கினால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்பது ஐதீகம்.