ஆணழகன் போட்டியில் அசத்திய தந்தை-மகன்..! பதக்கத்தோடு சென்னை திரும்பிய சுவாரசியம்..!

தென்கொரியாவில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் சென்னையை சேர்ந்த தந்தை-மகன் பதக்கத்தை வென்றுள்ளது அனைவருக்கும் ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக ஆணழகன் போட்டி தற்போது தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் 37 நாடுகளிலிருந்து 300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும், சீனியர் பிரிவிலும் சென்னையை சேர்ந்த தந்தை மகன் கலந்து கொண்டனர்.  சீனியர் பிரிவில் பங்கேற்ற தந்தை ராஜேந்திரன் மூன்றாவது இடத்தை தட்டி சென்று வெண்கல பதக்கத்தை தக்க வைத்துக்கொண்டார். அதேபோன்று 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பெஞ்சமின் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். ராஜேந்திரனின் மகன் தான் பென்ஜமின் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் இதுகுறித்து தெரிவிக்கும் போது, "தந்தை மகன் இருவரும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இந்த ஒரு நிகழ்வு இதுவே முதல் முறை.. தலைமுறையினரை இது போன்று போட்டிகளில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். உடலும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை' என தெரிவித்து இருந்தார். இதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு முன்னதாக ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். ஆணழகன் போட்டியில் தந்தையையும் மகனும் கலந்துக் கொண்டு பதக்கம் வென்று உள்ளது இதுவே முதல் முறை என்பதால், அவர்களுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.