டிச.1 மறக்காதீங்க..! சுங்க சாவடியை கடக்க பாஸ்டேக் கட்டாயம்..! கட்டணம் எவ்வளவு தெரியுமா...?

டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்க சாவடியில் பாஸ் டேக் அட்டையை கட்டாயம் பயன்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நவம்பர் 22 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை இலவசமாக பாஸ்ட்ராக் காடை வழங்க வங்கிகளுக்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவும் பிறப்பித்து உள்ளது. 

ரேடியோ பிரக்கீயூயன்ஸி ஐடெண்டிஃபிகேஷன் (ஆர்.எப்.ஐ. டி ) இந்த அட்டையை வாகனத்தின் முகப்பு முன்பு ஒட்டப்பட்டு சுங்க சாவடியை கடக்கும்போது சாதாரணமாக 10 வினாடிகளில்  கடந்து செல்லலாம். இதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனை பெற வாகன பதிவு சான்று, புகைப்படம் மற்றும் அடையாள அட்டையை காண்பித்து அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் மாறும். அதன் படி ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ரூபாய் 250 திரும்ப பெரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அட்டை பெறுவதற்கு ரூபாய் 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு முழுவீச்சில் வேலை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது வரை 40% வாகன ஓட்டிகள் மட்டுமே பாஸ்டேக் காடுகளை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள அனைவரும் இந்த கார்டை பயன்படுத்த  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 48 சுங்க சாவடியில் 482 பாதைகளில் பாஸ்டேக் கட்டண முறை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 

அதன்பிறகு டிசம்பர் 1 முதல் ஒரே ஒரு பாதையில் மட்டுமே பணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மற்ற பாதைகள் அனைத்திலும் பாஸ்டேக் பயன்படுத்தி தான் செல்ல முடியும். ஒருவேளை பாஸ்டேக் லைனில், பாஸ்டேக் கார்டு இல்லாமல் சென்றால் இருமடங்கு கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது