ஏடிஜிபி கொடுத்த விருந்து..!  குடி போதையில் கீழே விழுந்த பிரபல தொழிலதிபர் மரணம்..!    

கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மது அருந்தி விட்டு வெளியேறிய இரண்டு தொழிலதிபர்கள் தவறுதலாக தடுமாறி கீழே விழுந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த புதன்கிழமையன்று ஏடிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். இதில் பல்வேறு பிரபலங்கள் தொழில் அதிபர்கள் நண்பர்கள் என கலந்து கொண்டு உள்ளனர்.

சென்ன பாந்தியன் குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 72 வயது மதிக்கத்தக்க தொழிலதிபரான ரமேஷ் ஜெய் துலானி என்பவரும், 76 வயதான மிர்துன் ஜெய் சிங் என்பவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மது அருந்திவிட்டு எஸ்கலேட்டரில் தள்ளாடியபடி கீழே இறங்கி உள்ளனர்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் இருவருக்கும் அடிபட்டு இருந்ததால், இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அப்போது ஏற்கனவே ரமேஷ் ஜெய் துலானி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு நபர் மிர்துன் ஜெய் சிங்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.