குழந்தைகளுக்கு தாய் பால் புகட்டுவது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும்,பயணத்தின் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ ..தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் புகட்ட சற்று சங்கடப் படுவதை தவிர்க்கவும், அவர்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபல நடிகை தான் பாலூட்டும் சமயத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டு உள்ளார். 

பாலூட்டுவது வெட்கப்படும் விஷயமோ அல்லது சங்கடப்படக்கூடிய விஷயமோ அல்ல என்பதை உலகிற்கு உணர்த்தும் வண்ணமாக பிரபல ஹாலிவுட்  நடிகை கிலாரோ ஸ்டெயின் தனது  இன்ஸ்கிராம் பக்கத்தில் இந்த புகைபப்டத்தை வெளியிட்டு உள்ளார். இதற்கு முன்னதாக செரீனா வில்லியம்ஸ் மற்றும் கிறிஸ்டி டேகன்  தாங்கள் பாலூட்டுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு  இருந்தனர். 

இந்த நிலையில், தாய்ப்பாலின் மகத்துவத்தையும்,பொது இடங்களில் தாய்பால் கொடுப்பதும் மக்கள் சாதரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அதே வேளையில் இது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும்  நடிகை கிலாரோ ஸ்டெயின் இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.