முகத்தில் அதிகம் பருக்கள் இருகிறது என்று , நிறைய பேர் கவலை படுவதை பார்க்க முடியும். ஆனால் முகத்தில் முகப்பருக்களால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானாலும் பார்ப்பதற்கு இளைமையுடன் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, முகப்பருக்கள் உள்ள பெண்கள், பருக்கள் அல்லாத பெண்களின் மரபணுக்களை சேகரித்து ஒப்பிட்டு பார்க்கையில், முகப்பருக்கள் அல்லாத பெண்களை விட பருக்கள் உள்ள பெண்களின் சருமத்தில் வயது தொடர்பான செல்கள் மிகவும் பொலிவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
பருக்கள் உள்ள பெண்கள் குறைவாகவே முதிர்ச்சியை அடைவார்கள் என்பதை கண்டறிந்து, இது தொடர்பான ஆராய்ச்சியில், பருக்கள் கொண்ட பெண்களின் டெலோமியர்ஸ் எனும் செல்லின் அளவு நீளமாக இருந்தது தெரியவந்துள்ளது.
பெண்களின் முகத்தில் உருவாகும் ஒவ்வொரு பருக்களை பொறுத்து செல்களின் நீளம் மாறுபடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக தான் பருக்கள் உள்ள பெண்களின் சருமம் இளமையாக இருப்பதாக ஆய்வில் கண்டறியபட்டது.
அப்படினா, இனி பருக்கள் வந்தால் கவலை வேண்டாம்..... உங்களுக்கு...........
