இன்கம்டாக்ஸ் செலுத்த காலநீட்டிப்பு கிடையவே கிடையாது.! வருமான வரித்துறை அதிரடி..! 

2018 19 ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளையோடு... அதாவது ஆகஸ்ட் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் என்று வருமான வரித்துறை தலைமை அலுவலகம் அதிரடியாக ட்வீட் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் எந்த காலநீட்டிப்பும் கிடையாது என  தீர்க்கமாக தெரிவித்து உள்ளது. 

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதள தகவல்கள் முற்றிலும் பொய்யானது எனவும் மத்திய வருமான வரித்துறை இயக்குனர் அதிரடியாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வருமான வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் அனைவரும் மார்ச் மாதம் முடிய ஆண்டு கணக்கு  முடிந்த உடனேயே வருமான வரி கட்டுவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டனர்.

இந்த நிலையில்தான் ஜூலை மாத இறுதியில் ஒரு மாத கால அவகாசத்தை நீட்டித்து மத்திய வருமானவரித் துறை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் துறை தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் கால அவகாசம் கிடைக்குமா என பலர் ஏக்கத்தோடு காத்திருந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் இன்றைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எனவே வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது  வருமான வரி தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தவறும்பட்சத்தில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும் வாய்ப்பும் உள்ளது

அதே வேளையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு பிறகு செலுத்தினால் அபராதம் மட்டுமின்றி வரிக்கு வட்டியும் செலுத்த நேரிடும். வரிச்சலுகை எதையும் பெற  முடியாது.  ஆனால் சரியான நேரத்தில் வரி செலுத்தி விட்டால் வட்டியுடன் கிடைக்க வேண்டிய பணம் திரும்ப கிடைத்து விடும் 

 

http://incometaxindiaefilling.gov.in என்ற இணையதளத்தில் வருமான வரியை தாக்கல் செய்யலாம். இதற்கு பான் எண் கட்டாயம் வேண்டும். பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தியும் வருமான வரியை  தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.