Asianet News TamilAsianet News Tamil

அத்திவரதர் விஷயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்த அறநிலையத்துறை..! பிரயோஜனப்படுமா..?

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகப்பெரிய விசேஷமான அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

express service plan announced by aranilaiyathurai
Author
Chennai, First Published Jul 19, 2019, 8:10 PM IST

அத்திவரதர் விஷயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்த அறநிலையத்துறை..! பிரியோஜனப்படுமா..?

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மிகப்பெரிய விசேஷமான அத்திவரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது அறநிலையத்துறை. இதற்கிடையில் நேற்று மட்டும் கூட்டநெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவு செய்த அற நிலைய துறை எக்ஸ்பிரஸ் சேவை திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியது.

express service plan announced by aranilaiyathurai

அதன்படி மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரிசனம் செய்யலாம் என அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதன் மூலமாவது கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியுமா என இந்த  சேவையை தொடங்கி  உள்ளது  அறநிலையத்துறை.

express service plan announced by aranilaiyathurai
 இருந்தாலும், இந்த திட்டம்  மிக சிறந்த திட்டமா ..? என்பது கேள்வி குறியே. காரணம்.. முறையான ஏற்பாடுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை என்பதே.. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் விழா என்பதால் அரசு முன்கூட்டியே முறையான நடவடிக்கை எடுத்து திட்டம் வகுத்து இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios