தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன் படி, விழுப்புரம் கடலூர் நாகப்பட்டினம் வேலூர் திருவண்ணாமலை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் என 8 மாவட்டடத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை அறிவிப்பு  வெளியாகி  உள்ளதால் மழைக்காக மக்கள் பெருத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 

வெப்ப சலனம் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அதேபோல் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டு உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை பொருத்தவரையில் மழைக்கான வாய்ப்பு சற்று குறைந்து உள்ளதாகவும் சென்னையை பொருத்தவரையில் ஒரு சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது