தமிழகத்தில் செம மழை வரப்போகுதாம்..! பயங்கர மழை வரக்கூடிய மாவட்டம் இதுதான்..! 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான தூரல் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது, அதற்கேற்றவாறு இன்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதிய வேளையில் லேசான சாரல் மழை பெய்தது, இதனால் சற்று குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் இந்த கிளைமேட்டை என்ஜாய் செய்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் 14 சென்டி மீட்டர் மழையும் திருவண்ணாமலை செங்கம் பகுதியில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோன்று சாத்தூர், பேச்சிப்பாறை, சங்கராபுரம் உள்ளிட்ட இடங்களில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் புல்புல் புயல் காரணமாக மேற்கு வங்காளம் ஒரிசா வங்கதேசம் ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.