Happy Ramadan 2024 : ரம்ஜான் 2024 எப்போது..? புனித நாளின் தேதி, வரலாறு மற்றும் முக்கியத்துவம் இதோ!
இஸ்லாமிய மக்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் ரமலான் நோன்பை கடைப்பிடித்து ஈடுபட்டு வருகின்றனர். இது நம்பிக்கை, பிரதிபலிப்பு மற்றும் கருணை செயல்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான மாதம் ஆகும். ரமலான் நோன்பை விடியற்காலை முதல் சாயங்காலம் வரை உண்ணாவிரதத்தை கடைபிடிப்பதாகும். இது பிரார்த்தனை மற்றும் நற்செயல்கள் மூலம் சுய ஒழுக்கம், பட்ச பாதம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வலியுறுத்துகிறது.
ரமலான் நோன்பு முடிவடையும்போது முஸ்லிம்கள் ஈத் உல்-பித்ர் அல்லது ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இது நோன்பை வெற்றிகரமாக முடிப்பதையும் இஸ்லாமிய மாத ஷவ்வால் தொடக்கத்தையும் குறிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டில் ஈத் அல்-பித்ரின் சரியான தேதி பிறை நிலவின் பார்வையை பொறுத்தது. இது இஸ்லாமிய சந்திர நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
ரம்ஜான் பண்டிகை 2024 இந்தியாவில் எப்போது?
ரம்ஜான் பண்டிகையின் தேதி ஒவ்வொரு ஆண்டும் சந்திரனைப் பார்க்கும் போது மாறுபடும் மற்றும் ஒரு இடத்தின் புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில், தேதி ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மாறுபடும். அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியாவில், ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ஆம் தேதி, அதாவது நாளை வியாழன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
2024 ஈத்-உல்-பித்ர் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:
இந்த பண்டிகையானது, மன்னிப்பு மற்றும் ஒருவரின் நம்பிக்கையை புதுப்பித்தல் மற்றும் மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை குறிக்கிறது. இஸ்லாத்தின் விழுமியங்களைப் பற்றி சிந்திக்கவும், ஒற்றுமை, அன்பு மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதற்கும் இது ஒரு நேரம். அதுமட்டுமின்றி, இந்த பண்டிகை ரமலான் வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறது. இது சுய ஒழுக்கம் மற்றும் அல்லாஹ்வின் பக்தியின் காலம். இந்த பண்டிகை இஸ்லாமிய மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது மற்றும் முஹம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து அறியலாம்.
இதையும் படிங்க: இப்தார் விருந்து ஏன்? ரமலானில் இஸ்லாமிய நண்பர்களுக்கு உதவ இதைத் தெரிஞ்சுக்கோங்க!
2024 ஈத்-உல்-பித்ர் கொண்டாட்டங்கள்:
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இது ஒரு சிறப்பு நாள் மற்றும் இது மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. அவர்கள் அதிகாலையில் எழுந்து மசூதிக்கு சென்று நமாஸ் செய்கிறார்கள். மசூதிகளில் நடைபெறும் சலாத் அல்-ஈத் எனப்படும் சிறப்பு பிரார்த்தனையுடன் நாள் தொடங்குகிறது. அங்கு முஸ்லிம்கள் கூடி பிரார்த்தனை செய்கிறார்கள் மற்றும் புனித ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் வலிமை மற்றும் ஒழுக்கத்திற்காக நன்றி தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணியை சாப்பிட்டு கொலஸ்ட்ரால் எகிறிவிடும் என்ற அச்சமா? அப்போ இந்த பானங்களை ட்ரை பண்ணுங்க!
தொழுகைக்குப் பிறகு மக்கள் ஒருவருக்கொருவர் "ஈத் முபாரக்" வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒருவரையொருவர் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்தும் மகிழ்கிறார்கள். மேலும் வீட்டில் பல வகையான உணவுகள் செய்து உண்டு மகிழ்கிறார்கள். இந்நாளில் ஏழை மக்களுக்கு உதவி செய்யப்படுகிறது. ஈத் அல்-பித்ர் என்பது இஸ்லாத்தின் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் நேரம் மற்றும் ஒற்றுமை, அன்பு மற்றும் இரக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D