காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் போலவே முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது நன்மை பயக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்பதை அறியாமலேயே பெரும்பாலானோர் அதை செய்கின்றனர். அசைவப் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது எப்போதும் முட்டை தான். இறைச்சிகளைக் காட்டிலும் முட்டையில் புரதமும் அதிகம், சுவையும் சற்று அதிகம். எனவே அசைவம் உண்ணாதவர்களில் பலர் முட்டையை விரும்பி உண்பதை நாம் காணலாம்., அன்றாட உணவிலும் முட்டை இன்றி அமையாதது ஆகி விட்டது. கோழி முட்டையைப் போல ஓர் முழுமையான உணவை குறிப்பிட முடியாது.

 

அந்த அளவுக்கு தரமான சத்துகள் நிறைந்தது முட்டை. முழுமையாக உருவான முட்டை சராசரியாக 45 முதல் 70 கிராம் எடை இருக்கும். அதில் ஓட்டுப் பகுதி மட்டும் 8% _10% இருக்கும். மொத்தத்தில் முட்டையில் 12_14 சதவீதம் புரதச்சத்து. முட்டையின் புரதத்தில் அவசியமான அமினோ அமிலங்கள் சரியான சமநிலை விகிதத்தில் இருப்பதால், இதுவே முழுமையான புரதமாகும். 100 சதவீதம் உடலால் உட்கவரப்படும் புரதம் முட்டையின் புரதம் மட்டுமே. நன்கு செரிமானமாகக் கூடியது. 10_12 சதவீதம் கொழுப்புச் சத்துகள் உண்டு. 

மேலும், விட்டமின்_ஏ, விட்டமின்_டி நிறைந்தது. விட்டமின்_சி முட்டையில் குறைவே. இரும்பு, இவைதவிர பாஸ்பரஸ், அயோடின், பொட்டாசியம், கந்தகம் போன்ற தாதுக்களும் முட்டையில் உள்ளன. முட்டையின் பெரும்பகுதி கால்சியம் சத்து, அதன் ஓட்டில்-தான் இருக்கிறது. இவ்வளவு சத்துமிக்க ஆனால் இந்த முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கலாமா கூடாதா என்பது தான் தற்போதைய கேள்வி. வீட்டில் பெண்கள் அனைவருமே ஃபிரிட்ஜில் முட்டையை பாதுகாப்பாக வைப்பதையே விரும்புகின்றனர். காரணம் அப்போது தான் முட்டைகள் கெடாமலும், உணவில் விஷத் தன்மை ஏற்படாமலும் இருக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். 

ஆனால் உண்மையில் முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தாலும், வெளியில் வைத்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். முட்டையின் ஓட்டில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவானது பொதுவாக விலங்குகளின் குடலில் இருக்கும். இந்த பாக்டீரியாவானது முட்டையை ஃபிரிட்ஜில் வைத்தாலும், அறையில் வைத்தாலும் உயிருடன் தான் இருக்கும். முட்டையை வேக வைக்கும் போதோ, பொறிக்கும் போதோ தான் பாக்டீரியாக்கள் ஒழியும். எனவே முட்டையை எங்கு வைத்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் அறையிலேயே வைத்து முட்டையைப் பயன்படுத்துவது தான் ஆரோக்கியமானது.