நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தை வரும் 10ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

கிராமப்புற ஏழை எளிய மக்கள் மற்றும் விதவைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத்திட்டத்தை வரும் 10ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார் என சட்டப்பேரவையில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புற ஏழைப்பெண்கள் 77,000 பேருக்கு, தலா 50 நாட்டு கோழி குஞ்சுகளும், அவற்றை பாதுகாக்க ஏதுவாக 2,500 ரூபாய் மதிப்புள்ள கூண்டுகளும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த திட்டம் 50 கோடி ரூபாய் செலவில் செயல் படுத்தப்பட உள்ளதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.