கொண்டைக்கடலையில் இப்படி ஒருமுறை புலாவ் செஞ்சு கொடுங்க.. மிச்சமாகாது!
Chana Pulao Recipe : கொண்டக்கடலையில் சுவையான புலாவ் செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்று மதியம் சமைப்பதற்கு காய்கறிகள் ஏதும் இல்லையா? ஆனால் வித்தியாசமான சுவையில் ரைஸ் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.
பொதுவாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் புலாவ். புலாவில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாம் காய்கறிகள் ஏதும் இல்லாமல், வெறும் கொண்டக்கடலையை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளப் போகிறோம். கொண்டைக்கடலை ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதால் இதில் புலாவ் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையாக இருக்கும் முக்கியமாக செய்வதற்கும் மிகவும் எளிது. மதியம் உணவிற்கு குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் இந்த ரெசிபி செய்து கொடுங்கள். அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க... இப்போது கொண்டைக்கடலை புலாவ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வீட்ல ராஜ்மா இருந்தா ஒருமுறை இப்படி புலாவ் செஞ்சி பாருங்க.. டேஸ்டா இருக்கும்!
கொண்டகடலை புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
அன்னாச்சி பூ - 1
ஏலக்காய் - 2
மிளகு - 5
சோம்பு - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
இதையும் படிங்க: அசத்தலான சுவையில் வெங்காய புலாவ்.. ஒருமுறை இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க!!
செய்முறை :
கொண்டைக்கடலை புலாவ் செய்யும் முதலில் எடுத்து வைத்து கொண்டக்கடலையை தண்ணீரில் நன்கு கலவி சுமார் 1 மணி நேரம் ஊற வைத்து, பின் அதை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல அரிசியையும் தண்ணீரில் கழுவி சுமால் 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாச்சி பூ, சோம்பு, மிளகு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். இப்போது அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்ததாக அதில் நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு வேகம் வரை வதக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக வேகவைத்து எடுத்த கொண்டைக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்குங்கள். அவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதில் கழுவி வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவுங்கள். இப்போது குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். குக்கரில் விசில் போனதும் ஒருமுறை கிளறி விடுங்கள் அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கொண்டைக்கடலை புலாவ் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D