Cauliflower Coconut Milk Curry Recipe : அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று மதியம் வித்தியாசமாக அதுவும் அசைவ சுவையில் ஏதாவது குழம்பு சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறீர்களா? குறிப்பாக வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு காலிஃபிளவர் பிடிக்குமா? நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி காலிஃப்ளவர் சமைப்பீர்கள் என்றால், எப்போதும் போல வைக்காமல் ஒருமுறை இன்று காலிஃப்ளவர் கொண்டு சற்று வித்தியாசமான சுவையில் சமைத்துக் கொடுங்கள். அது வேறு ஏதுமில்லை காலிஃபிளவர் தேங்காய்ப்பால் கறி தான். இந்த ரெசிபியை நீங்கள் கூடான சாதம், சப்பாத்தி மற்றும் பூரி ஆகியவற்றையுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபி செய்வது ரொம்பவே சுலபமாக இருக்கும். இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: அட்டகாசமான சுவையில் காலிஃபிளவர் ரைஸ்... ஈசியா செய்ய ரெசிபி இதோ!!

காலிஃபிளவர் தேங்காய் பால் கறி செய்ய தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 200 மி.லி
குடைமிளகாய் - 1 ( பச்சை நிறம்)
கடலை மாவு - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கிராம்பு - 3 
பட்டை - 1
இஞ்சி - 1 (துருவியது)
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: காலிஃப்ளவரில் இப்படி ஒருமுறை கிரேவி செய்து சாப்பிடுங்க.. சுவை அட்டகாசமாக இருக்கும்..

செய்முறை :

காலிஃப்ளவர் தேங்காய்ப்பால் கறி செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, தேங்காய் பால், இஞ்சி, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். அடுத்ததாக சூடான நீரில் உப்பு கலந்து அதில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை கிராம்பு சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் பிறகு அதில் நறுக்கி வைத்த குடைமிளகாய் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கவும் அவை நன்றாக வெந்ததும் அதில் தயாரித்து வைத்த தேங்காய் பால் கலவியை ஊற்றி அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சபையில் காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி ரெடி. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D