ear grown in the hand in china
கடந்த 2015ல் நடந்த விபத்தில், ஜி என்பவர் தனது காதை இழந்துள்ளார்.இந்த சம்பவம் நடந்த இடம் சீனாவின் சியான் நகரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது .
இதனை தொடர்ந்து அவருக்கு எப்படியாவது காது பொறுத்த வேண்டும் என முடிவு செய்த சீன மருத்துவர்கள் , இதற்காக , அவருடைய கையில் செயற்கையான முறையில் ஒரு காதை வளர்த்து , அதை அவருக்கு பொருத்தி , தற்போது அவருக்கு அருமையாக காது கேட்கிறதாம் .
எப்படி சாத்தியம் ?
விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து 3 – டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அவரது கையில் காதை வளர்த்து வந்தனர் .கிட்டத்தட் 4 மாதங்களாக செயற்கையான முறையில் வளர்க்கப் பட்ட அந்த காது, ஒரு கட்டத்தில் நல்ல உணர்வுடன் செயல்பட்டதை தொடர்ந்து, அவர் கையிலிருந்து அந்த காதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பின்னர் , காது இருக்குமிடத்தில் 7 மணி நேரம் சவாலாக போராடி பொருத்தியுள்ளனர் சீன டாக்டர்கள். தற்போது அந்த ஜி என்கிற நபர் நல்ல ஆரோக்கியமான முறையில், காது கேட்பதை உணர முடிகிறது என தெரிவித்துள்ளார்
