ஆமாம்.. நான் எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் கோவிலுக்கு தான் செல்வேன்..! உரக்க சொன்ன துர்க்கா ஸ்டாலின்..! 

நாளை, அதாவது (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) 44 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, துர்கா ஸ்டாலின் அவர்கள் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் பல சுவாரசிய தகவலைகளை பகிர்ந்து உள்ளார். 
 
பகுத்தறிவு பேசும் ஸ்டாலின் அவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்... இருந்தாலும் துர்கா ஸ்டாலின் அப்படியே வேறு... கடவுள் நம்பிக்கை கொண்டவர். எந்த அளவிற்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர் துர்க்கா ஸ்டாலின் என்பதை அவரே சொல்லி இருக்கிறார்.

அதில், "நான் எந்த ஊருக்கு போனாலும் முதலில் காலை எழுந்த உடன் அந்த ஊரில் உள்ள கோவிலுக்கு தான் செல்வேன்... அவ்வளவு ஏன் கோபாலபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு தினமும் காலை சென்று வருவேன்.. குழந்தைகள் படிப்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால், என் மகளும் உதயநிதியும் சிறுவயதாக இருக்கும்போது என்னிடம் நன்கு அடி வாங்குவார்கள்... என்னை கண்டாலே உதயாவிற்கு ரொம்ப பயம்... ஆனால் அவங்க அப்பாகிட்ட  மிகுந்த செல்லம்.. அதனால்தான் எதுவாக இருந்தாலும் முதலில் அவங்க அப்பாவிடம் சொல்லிவிட்டு பின்பு எனக்கு தெரியப்படுத்துவான். என்னை பொறுத்தவரையில் சரியாக படிக்க வேண்டும்... சரியான நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும்... என கண்டிஷன் போட்டு வளர்த்தேன்.

என் கணவர் "ஒரு அப்பாவாக அனைத்தையும் சிறப்பாக செய்தார்... பசங்களுக்காக நிறைய நேரம் செலவழிப்பார்... ஹோம் ஒர்க் செய்ய உதவி செய்வது முதல் தேர்வு என்றால் அவர்களுடன் அமர்ந்து சொல்லிக்கொடுப்பது வரை மட்டுமின்றி காலை நேரத்தில் எழுந்து ஒரு முறை சொல்லிக் கொடுத்து... தேர்வுக்கு அனுப்பி விடுவது, பள்ளிக்கு அழைத்து சென்று இருவரையும் இறக்கி விடுவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

படிப்பை பொறுத்தவரையில் சரியாக படிக்கவில்லை என்றால், நான் கண்டிப்பு காண்பிப்பேன்... கோபம் வந்தால் அடித்துவிடுவேன்... அதனால் என்னை வேறு அறைக்கு செல்ல சொல்வார் உதயாவின் அப்பா. பின்னர் அவரே பசங்களுக்கு சொல்லியும் கொடுப்பார்... என ஸ்டாலினைப் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார் துர்கா ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய துர்கா ஸ்டாலின், "அப்பா வரும் வரை நான் உள்ளே வர மாட்டேன் என உதயா தெரிவிப்பாராம். அதாவது, முரசொலியில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஸ்டாலின் அவர்கள் வீடு திரும்ப இரவு தாமதமாகுமாம். அந்த தருணத்தில் கூட அவர் வந்தால் தான் வீட்டிற்குள் வருவேன்" என வெளியில் இருக்கும் சோபாவிலேயே அமர்ந்து இருப்பாராம் உதயா. 

இது போன்ற பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து உள்ளார் துர்கா ஸ்டாலின்..!