திமுக தலைவர் ஸ்டாலினின் 44 ஆவது திருமண தினத்தை முன்னிட்டு துர்கா ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அதில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

குறிப்பாக ஸ்டாலின் அவர்களுக்கு பிடித்த புளியோதரை பற்றி பேசியுள்ளார் துர்கா ஸ்டாலின். அப்போது, "நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன்.. அவ்வளவு ஏன் எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் கோவிலுக்கு தான் செல்வேன்.

கோபாலபுரத்தில் கூட காலையில் அடிக்கடி கோவிலுக்கு செல்வது என்னுடைய வழக்கம்... அந்த வகையில் பாபா கோவிலுக்கு செல்வேன் பெருமாள் கோவிலுக்கும் செல்வேன்.. பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டுவந்து அவருக்கும் கொடுப்பேன். அவரும் விருப்பமாக எடுத்துக்கொள்வார்.

குறிப்பாக அவரே கேட்பார்.. பாபா கோவில் பொங்கலா? எனக்கு கொடு என்பார். பெருமாள் கோவில் புளியோதரை எனக்காக எடுத்து வை என குறிப்பிடுவார். அந்த அளவிற்கு அவருக்கு பாபா கோவில் பொங்கலும் பெருமாள் கோவில் புளியோதரையும் மிகவும் பிடிக்கும் என துர்கா ஸ்டாலின், ஸ்டாலினைப் பற்றி துர்கா சில தகவலை புட்டுப்புட்டு வைத்துள்ளார். ஸ்டாலின்  பற்றிய மேலும் பல சுவாரசிய தகவலை அடுத்தடுத்த பதிவில் பார்க்கலாம்.