திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் 44 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, துர்கா ஸ்டாலின் அவர்கள் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் பல சுவாரசிய தகவலைகளை பகிர்ந்து உள்ளார். 

அப்போது, 

"எங்களுடைய தினந்தோறும் வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்வது... யோகா செய்வது நல்ல உணவு பழக்கவழக்கங்களை கொண்டிருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம். நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாகவே யோகா செய்து வருகிறேன்... இப்போதும் செய்கிறேன்.அதேவேளையில் தினமும் விடியற்காலை எழுந்தவுடன் நடைபயிற்சி மேற்கொள்கிறேன்.

வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது நடைபயிற்சி மேற்கொள்வேன். அதேபோன்று மாலையில் யோகா செய்கிறேன். இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்க முடிகிறது என்றால் இதை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும். மேலும் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வேன்.. தினமும் பழங்களை எடுத்துக் கொள்வோம்.

காய்கறிகளை பொறுத்தவரையில் ஏதாவது ஒரு கூட்டு தினமும் இருக்கும். உணவை பொறுத்தவரையில் எது இருந்தாலும், ஒரு கப் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டார் அவர்....அவரைப் பொறுத்தவரையில் முன்பெல்லாம் யோகா அதிக அளவு செய்துவந்தார். இப்போதைக்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார்" என இன்றளவும் மிக இளமையாக காணப்படும் ஸ்டாலின் பற்றி துர்கா ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இது போன்ற பல்வேறு சுவாரஸ்ய கருத்துக்களை பகிர்ந்துள்ளார் துர்கா ஸ்டாலின். அவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.