due to social network issue young couples suffers in their personal
பேஸ்புக், வாட்ஸ்ஆப்- உடன் குடும்பம் நடத்தும் இளம் தம்பதியினர்....
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆர்வம் காடும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் . சமூக வலைதளங்களிலேயே நட்பு வட்டாரத்துடன் நட்பாக இருப்பதும், வித்தியாசமான வீடியோ பதிவுகளை பார்த்துக் கொண்டும் , கேம்ஸ் விளையாடுவதும் எப்போதும் ஆன்லைனில் இருந்துக்கொண்டு பிரவுசிங் செய்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது .
இதன் தாக்கம் நம் மனதளவில் ஒரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபாடு குறைய தொடங்கியுள்ளது . இன்னும் சொல்லப் போனால், புதுமண தம்பதிகள் கூட தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கு காட்டும் ஆர்வத்தை விட சமூக வலைத் தளங்களில் காட்டும் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது
இதற்கு மாறாக இளம் தம்பதிகள் விட, வயதான தம்பதிகளே அதிக அளவு தாம்பத்யத்தில் ஈடுபடுவதாக அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சுருக்கமாக சொல்லப்போனால், குடும்ப உறவில் விரிசல் ஏற்பட, எப்பொழுதும் போனும் கையுமாக இருப்பதும் காரணம் என கூறப்படுகிறது
