பீகாரில் பாம்பை கையில் பிடித்து முத்தமிட்டுக்கொண்டே இருந்தவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் கோவிந்த்பூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் யாதவ். இவர் குடிபோதையில் ஒரு பாம்பைக் கையில் பிடித்து வைத்துக்கொண்டு முத்தமிட்டு கொஞ்சி விளையாடி இருக்கிறார. அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அஞ்சி அவரை பாம்பை விட்டுவிடும்படி கூறியுள்ளனர்.

அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் அந்த இளைஞர் பாம்பை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டே இருந்தார். பாம்புடன் அருகில் இருந்த கோவிலுக்குள் புகுந்த அவர் கடவுளிடம் மன்னிப்பு கேட்பதுபோல வணங்கினார். பின் பாம்பை கழுத்தில் போட்டுகொண்டு நடனம் ஆடியபடியே கோவிலில் இருந்து திரும்பினார். தொடர்ந்து பாம்பை கையில் பிடித்து முத்தமிட்டுக்கொண்டே இருந்த அவர் திடீரென அதனைக் கீழே விட்டார்.

Andrey Botikov: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானி கழுத்தை நெறித்துக் கொலை!

Scroll to load tweet…

பாம்பு உடனடியாக ஓடி ஒளிந்துகொண்டது. பாம்பை முத்தமிட்ட போதை ஆசாமி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று கூறிவிட்டனர்.

அண்மையில் இதேபோன்ற சம்பவம் பீகாரின் மற்றொரு பகுதியிலும் நடந்தது. சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் விஷப் பாம்பை தன் வாய்க்குள் விட்டு சாகசம் செய்தாகக் கூறியுள்ளார். அப்பகுதி மக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் விஷப்பாம்பை கீழே விடாமல் வாய்க்குள் விட்டு விளையாடினார். பின்னர் மயக்கம் அடைந்த அவர் உயிரிழந்துவிட்டார்.

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; பீதி அடைய வேண்டாம்... ஆளுநர் ரவி வேண்டுகோள்