இருமல் மருந்தை குடித்த 9 குழந்தைகள் அடுத்தடுத்து பலி ..! இந்த மருந்தை வாங்காதீங்க மக்களே..! 

புதிய வேதிப்பொருள் சேர்க்கப்பட்ட இருமல் மருந்தை எடுத்துக்கொண்டதால் 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரின் உதம்பூர் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் இறந்தனர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதில் Coldbest-PC என்ற மருந்துதான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலுள்ள Diethylene Glycol என்ற மற்ற ஒரு வேதிப்பொருள் காரணமாக இந்த மருந்து விஷத்தன்மை கொண்டதாக மாறி உள்ளது என்றும் இந்த மருந்தை இருமலுக்கு பரிந்துரை செய்த போது இதனை எடுத்துக் கொண்ட பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coldbest-PC  மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டு வந்தாலும் தற்போது இந்த மருந்துடன் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருளான Diethylene Glycol சென்னை மணலியில் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது இந்த வேதிப்பொருளை ஆய்வுக்கு உட்படுத்த படாமலேயே இருமல் மருந்துடன் சேர்த்து உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் இந்த மருந்தின் விற்பனை தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் ஆன்லைன் மற்றும் இது குறித்து முழுமையான விவரம் தெரியாத நபர்கள் யாரேனும் மருந்தகம் சென்று நேரடியாக மருந்து வாங்கினாலோ அல்லது இதுகுறித்த விவரம் தெரியாமல் இருந்தாலோ மற்றவர்களுக்கும் தெரிய படுத்தி இந்த மருந்தை வாங்காமல் இருப்பது நல்லது என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

Coldbest-PC என்ற இருமல் மருந்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் Diethylene Glycol என்ற துணை வேதிப்பொருள் இருந்ததும், அதனால் மருந்தின் விஷத்தன்மை கூடியதும்  ஆய்வில் தெரியவந்தது.

இதனிடையே Coldbest-PC மருந்தானது ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள நிறுவனம் தயாரித்தாலும் அதன் வேதிப்பொருட்கள் சென்னையை அடுத்த மணலியில் தயாரானதாகும். மருந்து உற்பத்தி தொடங்குவதற்கு முன்பு அதன் வேதிப்பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் அதன் வேதிப்பொருட்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளார்கள். இது தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தவறுகள் ஏன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இதற்கிடையே Coldbest-PC இருமல் மருந்தின் விற்பனை தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மருந்து இணையத்தில் கிடைக்க வாய்ப்பிருப்பதால், ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என மருந்து விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.