உங்களது மொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை இதோ..!!
உங்களது மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். இங்கு கூறப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும்.
மொபைல் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாத ஒரு உயிர் போல மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஏன் நாம் செல்லும் எல்லா இடங்களுக்கும் கூட மொபைலை எடுத்துச் செல்கிறோம். அப்படியிருக்கும் போது உங்களது மொபைல் போன் தண்ணீர் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? வாங்க உங்கள் மொபைல் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெளிவாக இங்கு பார்க்கலாம்.
மொபைல் தண்ணீரில் விழுந்தால் உடனே சுவிட்ச் ஆப் செய்யயுங்கள்:
உங்களது மொபைல் போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் வெளியே எடுத்தவுடன் அதை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். பெரும்பாலும் மொபைல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் தானாக ஆப் ஆகிவிடும். ஒருவேளை அப்படி ஆப் ஆகவில்லை என்றால், மொபைலை வெளியே எடுத்தவுடனே சுவிட்ச் ஆப் செய்யுங்கள். ஏனெனில், மொபைல் போன் உள்ளே இருக்கும் சாதனங்கள் ஷார்ட் ஆகாமல் இருக்கும். பின் போனில் இருக்கும் சிம் கார்டை வெளியே எடுக்க வேண்டும்.
மொபைலை நன்கு துடைக்க வேண்டும்:
மொபைலில் இருந்து சிம் கார்டை எடுத்த பின் மொபைலில் இருக்கும் நீரை காட்டன் துணி அல்லது அதிக நீரை உறிஞ்சும் துணை கொண்டு துடைக்க வேண்டும். மொபைலில் இருக்கும் நீரை எடுக்க சிலர் ஹேர் டிரையரை பயன்படுத்த சொல்வார்கள். தப்பி தவறி கூட நீங்கள் அதை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் ஹேர் டிரையரில் இருந்து வரும் காற்று மிகவும் சூடாக இருப்பதால் மொபைல் உள்ளே இருக்கும் சிறு மின் இணைப்புகளை சேதப்படுத்திவிடும்.
மொபைலை சார்ஜ் போடாதீர்:
ஏற்கனவே சொன்னது போல மொபைல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் ஸ்டவிட்ச் ஆப் ஆகிவிடும். மொபைல் சார்ஜ் இல்லாமல் தான் ஆப் ஆகியிருக்கிறது என்று நினைத்து சார்ஜ் போட வேண்டாம். நீங்கள் சார்ஜ் போட்டால் மொபைல் முற்றிலுமாக பாதிப்படையும்.
மொபைலை ஷேக் செய்ய வேண்டும்:
அதுபோல் மொபைலுடன் ஹெட்போன் உள்ளிட்ட எந்தவொரு சாதத்தையும் இணைக்கக் கூடாது. மொபைலின் உள்ளே இருக்கும் நீரை வெளியேற்ற மொபைலை மெல்ல ஆட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஓரளவுக்கு நீரை வெளியேற்றலாம்.
அரிசி மூட்டையில் மொபைலை போடாதீர்:
மொபைல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் சில மொபைலை அரிசி மூட்டையில் போட சொல்வார்கள். அது நீரை உரிஞ்சும் என்று அவர்களது நம்பிக்கை ஆகும். ஆனால், மொபைலை அரிசியில் போட்டால் அது நீரை எடுக்காது. இதனால் எவ்வித பயனுமில்லை.
இதையும் படிங்க: TN Police Mobile Ban: பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. சென்னை கமிஷ்னர் அதிரடி..!
மொபைலை வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும்:
மொபைல் போன் தண்ணீரில் விழுந்தவுடன் ஒருபோதும் சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. அதுபோல் சூடான எந்த ஒரு பொருளையும் மொபைல் பக்கத்தில் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக வெயில் படாத இடத்தில் வையுங்கள். பின் அதனை எடுத்து ஆன் செய்து பாருங்கள். ஒருவேளை உங்களது மொபைலில் அதிக தண்ணீர் போகவில்லை என்றால் ஆன் செய்த பின்னர் வழக்கம் போல் அது ஒர்க் ஆகும்.
ஒருபோது பொய் சொல்லாதீர்கள்:
இவை அனைத்தையும் செய்த பின் உங்களது மொபைல் ஆன் செய்யவில்லை என்றால் உடனடியாக நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு மொபைலை எடுத்து செல்லுங்கள். தற்போது பெரும்பாலான மொபைலை நீரில் போட்டால் வாரண்டி இருக்காது. மேலும் வாரண்டி பெறுவதற்காக மொபைலை தண்ணீரில் போடவில்லை என்று பொய் சொல்லாமல் உண்மையை மட்டும் சொல்லுங்கள்.
தற்போது விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் "இம்மர்ஷன் சென்சார்கள்" உள்ளதால், நீர் உள்ளிட்ட எந்தவொரு திரவம் இதில் பட்டாலும் கலர் மாறிவிடும் என்பதால் நீங்கள் பொய் சொல்வதை அவர்கள் ஈஸியாக கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே, நீங்கள் மாட்டிக் கொள்ளாதீர்கள்.