நம் ஒவ்வொருக்குள்ளும் சில ரகசியங்கள் இருக்கத்தான் செய்யும் அந்த ரகசியங்கள் ரகசியங்களாக இருக்கும் வரையில் மட்டுமே பலமான ஒன்றாக கருதப்படும். மற்றவருக்கு எப்போது அந்த ரகசியம் உங்கள் மூலமாக தெரிய வருகிறதோ பிறகு நீங்கள் பலவீனமாக மாறிவிடுவீர்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி எந்த ஒரு எந்தெந்த முக்கியமான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை பார்க்கலாமா ?

முதலாவதாக நமக்கு மிகவும் தேவையான பணம். அதாவது நிதி பிரச்சனை. பணம் எவ்வளவு இருந்தாலும் போதாது என கேள்விப்பட்டிருப்போம். அதே சமயத்தில் இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வது பேரின்பத்தைக் கொடுக்கும். மேலும் சில சமயங்களில் ஏற்படும் பணப்பற்றாக்குறை காரணமாக அதனை நம் நண்பர்களுடன் சொல்லப்போக, பின்னர் அது ஒரு பிரச்சினையாக மாறலாம். அதாவது நம் நண்பர்களை இழக்க நேரிடலாம்.

நாம் கற்றுக்கொள்ளும் மற்றவர்களுக்கு குரு மந்திரத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது. நமது குரு நமக்கு எதை சொல்லிக் கொடுத்தார்களோ அதனை முறை இல்லாமல் மற்றவர்களுக்கு சொல்லித் தருதல் தவறு. உங்களுடைய குரு கூறும் அறிவுரைகளை அல்லது மந்திரத்தையோ மற்றவர்களுடன் பகிராமல் இருக்கலாம்.

குடும்ப சண்டை எந்த குடும்பத்தில் தான் சண்டை இல்லாமல் இருக்கின்றது. நம் குடும்ப உறுப்பினர்களின் குணநலன்கள் நல்லது கெட்டது சண்டை சச்சரவுகள் எதுவாக இருந்தாலும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் கூடாது. காலப்போக்கில் நம் குடும்ப பிரச்சினையே மற்றவர்கள் முன் ஒரு கேலி பேச்சாக மாறிவிடும்.

இதேபோன்று மற்றவர்களுக்கு உதவும் போது ஊரறிய தெரிவித்துதான்  உதவ வேண்டும் என்பதில்லை. நீங்கள் உதவுவதை வெளியில் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் எந்த பயனும் இல்லை. உதவும் எண்ணம் கொண்டவர்கள் யாருக்கும் தெரியாமல் உதவி செய்வார்கள். அவர்களை தெய்வமாக பார்ப்பார்கள் பயனடைந்தவர்கள். 

எந்த ஒரு நேரத்திலும் உங்களது வயதை மற்றவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டால் சொல்லலாமே தவிர மற்றபடி யாரிடமும் உங்கள் வயதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே உள்ள தாம்பத்திய வாழ்க்கை முறை பற்றி மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி அவர்களிடம் பகிர்ந்து கொள்வது மாபெரும் தவறு.

உங்கள் அலுவலகத்தில் நீங்கள் ஒரு நல்ல பொறுப்பில் இருந்தால் உங்களுடைய விருப்பு வெறுப்புகளை மற்றும் மீது திணிக்கக்கூடாது அதிகாரம் இருக்கின்றது என அதனை தவறாக பயன்படுத்திக்கொள்ள கூடாது.