dont give the money for this days
நம் முன்னோர்கள் பலர் வீட்டில் உள்ள பணம் அல்லது நகைகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். மேலும் செலவு செய்யக் கூடாது என்று கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் யோசித்தது உண்டா?அதற்கான அர்த்தம் என்ன தெரியுமா
செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்க கூடாது ஏன்? செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகின்றது.
இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.இல்லையெனில், நம்மிடம் இருக்கு. அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.
மேலும், அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.
