இன்று இரவு 12 மணிக்கு..! மறக்காமல் இந்த ஜோதி மந்திரத்தை சொல்லிடுங்க..! 

வரும் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யமும் ஆனந்தமும் நிலைத்திருந்து ஒரு வெற்றி ஆண்டாக அமைய வேண்டும் என்றால் இந்த ஆண்டில் இறுதி நாளான இன்று நாம் மறவாமல் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை இப்பொழுது பார்க்கலாம்.

முதலில் வீடு முழுக்க தண்ணீர் விட்டு சுத்தம் செய்ய வேண்டும், பின்னர் ஒரு பச்சை கற்பூரத்தை சிறிதளவு நல்ல தண்ணீரில் கலந்து கொண்டு, வீடு முழுக்க தெளிக்க வேண்டும். உடன் சாம்பிராணி புகையும் காண்பிக்க வேண்டும்.

புத்தாண்டிற்கான சிறப்பு ஜோதி மந்திரம்:

அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெருஞ் ஜோதி என ஐந்து முறை வாய்விட்டு மனதார கூற வேண்டும்.

இவ்வாறு மந்திரத்தை கூறியவாறே இந்த ஆண்டு நான் செய்த அனைத்து  தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த தவறுகளுக்கு பொறுப்பேற்று கொள்கிறேன். 2018 ஆம் ஆண்டுக்கு என்னுடைய நன்றியையும், அன்பையும் கூறிவிட்டு வரும் 2019 ஆண்டை கை கூப்பி வரவேற்க வேண்டும். வரும் ஆண்டில் நேர்மையாக இருப்பேன், தெளிவாக உழைப்பேன், நல்ல முடிவை எடுப்பேன் வாழ்க்கைக்கு தேவையான முயற்சியையும் பயிற்சியையும் எடுப்பேன் என இன்று இரவு சரியாய் 12  மணிக்கு 2018 ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2019 ஆண்டை வரவேற்க தயாராக இருங்கள். பின் தூங்க செல்லுங்கள்.

காலை எழுந்ததும் சூரியன் உதிக்கும் திசையானகிழக்கை பார்த்து, கை கூப்பி வணங்கி விட்டு, பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும். அதே போல் 7 பேருக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ நம்முடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.மேலும் நம்மால் முடிந்தவரை 7 பேருக்காவது உதவிகள் செய்ய வேண்டும். 

அதே போல் இனி வரும் காலங்களில் நேர்மையாக இருப்பேன், தெளிவாக உழைப்பேன், பல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெறுவேன் என உறுதியாய் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். வரும் ஆண்டு உங்களுக்கு வெற்றி ஆண்டாக மாறி விடும்.