நல்ல உணவு நல்ல தூக்கம் நல்ல வேலை என்பது எல்லாம் இன்றைய  நிலைமையில் நினைத்து பார்க்க முடியுமா ..?

ஒரு சிலருக்கு இது போன்று அனைத்தும் நன்றாக அமைந்து விடும்.... ஆனால் பலருக்கு அது போல் இல்லை... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க உண்ணும் உணவு கூட சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாமல் அடித்து பிடித்து அலுவலகம் செல்லும் நபர்கள் ஏராளம்.

அவர்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துகொள்ள மாட்டார்கள்.. அதே போன்று காலை நேரத்தில் எழுந்தவுடன் எதையோ ஒன்றை அவசர கதியில் உண்டு  பேக் மாட்டிக் கொண்டே போய் கொண்டே  இருப்பார்கள் இது போன்றவர்கள் கட்டாயம் ஒரு விஷயத்தை மனதில் நினைக்க வேண்டும் ...எதை எடுத்துக் கொள்ள வேண்டும்..? குறிப்பாக காலை  எழுந்தவுடன் கட்டாயம் எதை உண்ண கூடாது என்பதை பார்க்கலாம்

காப்பி

பொதுவாகவே நம்மில் பலபேர் காலை எழுந்தவுடன் காப்பி அருந்துவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள் அல்லவா ..? ஆனால் அது போன்று காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காப்பி குடிப்பது ஆபத்தானது  என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்..

முதலில் சிறு தண்ணீர் குடித்து விட்டு, பின்னர் சில நேரம் கழித்து தான்  காப்பி அருந்த வேண்டும் என்கிறார்கள்...

வெள்ளரிக்காய்

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக வெள்ளரிக்காய்  எடுத்துக்கொள்வது சரி இல்லையாம் ...அதாவது  டய்ட் என்கிற பெயரில் காலை சிற்றுண்டியாக வெள்ளரிக்காய் மட்டும் எடுத்துக் கொள்வார்கள். காரணம் அதில் அதிக நீர்சத்து உள்ளது என்பதே....

இவ்வாறு எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சனை ஏற்படும் என்கிறார்கள்....

வாழைப்பழம்

காலை எழுந்தவுடன் ஒரு சிலர் வாழைப்பழம் உண்பதை வழக்கமாக வைத்து இருப்பார்கள். அவ்வாறு எடுத்துக்கொண்டால், அதில் உள்ள அதிகப்படியான மெக்னீசியம் சத்தால், விரைவில் இதய நோய் ஏற்பட  வாய்ப்பு உள்ளதாம்..

இனிப்பு

இதே போன்று காலை எழுந்தவுடன் இனிப்பு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது. அவ்வாறு எடுத்துக்கொண்டால் இன்சுலின் அதிகம் சுரக்க  வேண்டி கணையதிற்கு வேலைப்பளு அதிகரிக்கும். எனவே ஒரு சிலருக்கு விரைவில் நீரழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

தக்காளி

இதே போன்று காலை நேரத்தில் தக்காளி உண்பார்கள்...காலை நேரத்தில்  தக்காளி எடுத்துக் கொண்டால் இரைப்பை நோய் வரும்..மேலும் அசிடிட்டியை ஏற்படுத்தும்

எனவே எந்த வேளையில் எந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்துக்கொண்டு எடுப்பது நல்லது.

மேலும் இதற்கு பதிலாக காலை நேரத்தில், பிரட், முட்டை, நட்ஸ் போன்றவற்றை காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது நம் உடல் நல்ல ஆரோக்கியமாக இருப்பதை உணர முடியும். அதுமட்டுமில்லாமல் எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முடியும்.