FeFe Dog Perfume | நாய்களுக்காக ரூ.9000க்கு பெர்ஃப்யூம்! ஒரு இடத்தில் மட்டும் அடிக்கக்கூடாது!
யார் யாருக்கோ கிஃப்ட் வாங்கி தருகிறோம். இனிமே உங்க வீட்டு நாய்குட்டிக்கும், உங்களுக்கு புடிச்சவங்க வீட்டுல இருக்கிற நாய்குட்டிக்கும் கிஃப்ட் தர மார்கெட்டுல ஒரு புது பொருள் வந்துருக்கு அது என்ன தெரியுமா? இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் செல்லமாக நாய் வளர்ர்த்து வருபவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. நாய்களுக்கு பரிசாக அளிப்பதற்காக ஒரு புது பெர்ஃப்யூம் சந்தைக்கு வந்துள்ளது. இத்தாலியில் பெர்ஃப்யூம் தயாரிக்கும் Dolce & Gabbana நிறுவனம் நாய்களுக்கான புதிய வகை ஃபெர்பியூமை அறிமுகப்படுத்தியுள்ளது.
FeFe(ஃபெஃபெ) எனப்படும் இந்த பர்ஃப்யூமின் பெயர் Dolce & Gabbana நிறுவனர் டோமினிகோ டோல்ஸின் unconditional love for his loyal dog ஃபெஃபெயில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது.
தலைசுற்றவைக்கும் விலை!
ஃபெஃபெ ஃபெர்பியூம் வாசனையானது, மென்மையாக பரவி மெல்ல ஊடுருவும் வகையில் உள்ளது. இது செல்ல பிராணிகளுக்காகவே குறிப்பாக நாய்களுக்காவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 99 யுரோக்களாக நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இதன் விலை சுமார் ரூ.9000 ஆகும். இந்த ஃபெர்பியூம் செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு காஸ்மெடிக்ஸ் புரோட்டோகால் வழிமுறையை பின்பற்றியே தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய நிறுவனமான பியூரோ வெரிடாஸ் வகுத்துள்ள விலங்குகளுக்கான புரோட்டோகால் வழிமுறைப்படி பாதுகாப்பானவையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பெர்ஃப்யூமை அறிமுகம் செய்வதற்கு முன்பாக அந்த நிறுவனம் நாய் வளர்ப்பாளர்களிடம் பலமுறை கருத்துகளை கேட்டறிந்து ஃபெ ஃபெ ஃபெர்பியூமை தயாரித்துள்ளது. இந்த ஃபெ ஃபெ பெர்ஃபியூமின் நறுமணம் ஜென்டிலாகவும் தங்களது வீட்டு பிராணிகளுக்குப் பிடித்த வகையிலும் இருப்பதாக நாய் வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Dolce & Gabbanaவின் வெப்சைட்டில் ஃபெஃபெக்கான பெர்ஃப்யூமிற்கு கால்நடை மருத்துவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். அதனுடன் இந்த பெர்ஃப்யூம் குறித்த வாடிக்கையாளர்களின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன.
பெர்ஃப்யூம் பாட்டில் வடிவமைப்பு
இந்த புதிய பெர்ஃப்யூம் பாட்டில், அழகிய பச்சை நிற பாட்டிலில் அடைக்கப்பட்டு வருகிறது. அந்த பாட்டிலின் நடுவே பொன்னிறத்தில் நாயின் பாதம் போன்று அச்சு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் மூடி சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது. நாயின் பாத அச்சு 24 கேரட் தங்கத்தில் பூசப்பட்டுள்ளது. செல்லப் பிராணிகள் வளர்ப்புக்கான இந்த ஃபெர்ப்யூம் மார்க்கெட்டில் புதிய புரட்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி தடவ வேண்டும்?
Fe Fe ஃபெஃபெ பர்ஃப்யூமை நாய்களின் உரிமையாளர்கள் தங்களது கைகளில் ஸ்பிரே செய்து கொண்டு, பின்னர் கைகளால் நாயின் முதுகிலிருந்து வால்நோக்கி முடிகளில் தடவிவிட வேண்டும். இப்படி செய்வதன்மூலம் நாயின் ரோமங்களில் தேவையான அளவுக்கு வாசனை பரவும். இந்த பெர்ஃபியூமை நாய்களின் பின்பகுதி முடியில் நேராகவும் ஸ்பிரே செய்யலாம். ஆனால் ஒரே ஒரு இடத்தில் ஸ்பிரே செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நாயின் மூக்குப் பகுதியை ஸ்பிரே செய்வதை தவிர்க்க வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.