6 மணி நேரத்திற்கு பிறகு PPE கவச உடையை கழட்டும் வாழ வைக்கும் கடவுள் டாக்டர்.. ஆறாய் ஓடும் உழைப்பின் வியர்வை! 

கொரோனா எதிரொலியால் தொடர்ந்து 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பட்டு உள்ளதால், மக்கள் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் ஒரே ஒரு தீர்வு தனிமைப்படுத்திக்கொள்வதே என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

கொரோனா பரவலை தடுக்க மக்கள் தனிமைப்படுத்திக்கொள்வதே மிகவும் சிறந்தது என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் வேகமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்களும் செவிலியர்களும், தூய்மை பணியாளர்களும் தன்னலமற்று தொடர்ந்து வேலை ஆற்றி வருகின்றனர். மறுபக்கம் காவல்துறையினர் இரவு பகல் பாராமல் கண்விழித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் வீடியோ, ஒலிபெருக்கி மூலம் பல கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கொரோனாவுக்கு எதிராக நோய்த்தொற்று பரவாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

மருத்துவர்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு..! 

"நாங்கள் உங்களுக்காக கண்விழித்து போராடிக் கொண்டிருக்கிறோம். மக்கள் நீங்கள் அனைவரும் வீட்டிற்குள் இருங்கள்" என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதை பார்க்க முடிகிறது. மேலும் மருத்துவமனைகளில் பாதுகாப்பு உடையும் முக கவசம் அணிந்து சேவையாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்கு பிளாஸ்டிக்கால் ஆன பாதுகாப்பு உடையை அணிகின்றனர்.

இந்த ஒரு தருணத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் அதனை அணிந்து கொண்டே பணியாற்றுவதால் அவர்களுக்கு அதிக அளவில் வியர்த்து, உழைப்பு வியர்வையாய் வெளியேறுகிறது. அது மட்டுமல்லாமல் கோடைகாலம் என்பதால் சொல்லவே வேண்டாம்.. 

இந்த நிலையில் ஒரு மருத்துவர் 6 மணி நேரத்திற்கு பிறகு தன்னுடைய பாதுகாப்பு உடையை கழற்றும்போது வியர்வை சிந்திய உழைப்பு என்பதற்கு ஏற்ப அவருடைய சட்டை முழுவதும் வியர்த்து இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த போட்டோ சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது 

கொரோனா தம்மை தாக்கலாம் என்ற உயிர் பயம் இன்றி, தன்னலமற்று மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும் மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் மக்களாகிய நாம் அனைவரும் கடமைப்பட்டு உள்ளோம். எனவே அவர்களுக்கு மேலும்சிரமத்தை உண்டு பண்ணாமல் தன்னையும் பாதுகாத்துகொள்வது தனிமைப்படுத்திக்கொள்வதே நல்லது. வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.